புதன், 1 மே, 2019

ரிப்லை 1988 (REPLY 1988)

     எபிசோட் 1- கையோடு கை
வருடம் 1988, ஒலிம்பிக்,மாணவர்களின் புரட்சி என தென்கொரியாவில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்த காலக்கட்டம். வெளியே குளிரானாலும்,அவர்கள் இதயத்தில் நெருப்பிருந்தது.அவர்களிடம் அதிகமில்லையேன்றாலும், மனதில் அமைதியிருந்தது. இப்பொழுதிருக்கும் பொருட்களுக்கு ஒப்பிட்டு பார்த்தால் அப்பொழுது அனலாஃகின் வளர்ச்சிக்கட்டம். சிலிப்-ஆன் சினீக்கர்ஸும்,டெனிம் ஜீன்ஷூம் உடுத்திக்கொண்டு,வாக்-மேனில் புது பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் பதினெட்டாம் வயதின் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருந்திருந்தனர். ஆண்பிள்ளைகளுக்கு ஜேமி சோமர்ஸ் ,ஜோய் வாங்க்,சோப்பி மார்ஸு மற்றும் டீச்சர் ஜிமேனே என்று பித்தாய் இருந்தனர். பெண்பிள்ளைகள் பியர்ஸ் பிரோஸ்னன்,டாம் குரூஸ்,ரிட்சர்ட் கேர் மற்றும் புதியதாய் பிரபலமாகும் ஒப்பாக்கள் (பெண்கள் தன்னுடன் அதிக வயதுடைய ஆண்பிள்ளைகளை கூப்பிடும் முறை). ஆனால் ஆண் பெண் என்று வித்தியசம் இல்லாமல் தலைமுறையையும் தாண்டி பொதுவாக பிடித்த திரைப்படம் ‘எ பெட்டர் டுமாரோ-2 (A Better Tomorrow-2)’
             [செப்டம்பர் 1988, சியோல்,தொபோங்-கூ,சாங்முன்-டொங்]
“எங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்காலாம்,அவ கண்ணு என்னை மாறியே இருக்காம்,நான் அங்க போய் அவளை பார்த்து தெரிஞ்சிக்குவேன்”, தன் நண்பன் அருகில், உதட்டில் இரத்தம், போன் ரிசீவர் கையில்,குரல் நடுக்கத்துடன் சாகும் தருவாயில், சைனிஸ் மொழியில் கிழே கொரியன் சப்டைடிலுடன் ஆன்டனாவுடன் கூடிய சிறிய டிவியின் திரையில் உருக்கமாய் கூறிக்கொண்டிருந்தார். திரையின் முன்பு ஐந்து பேர் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, அந்த அறையில் மூன்று சிறிய குழந்தை பொம்மை, ஒலிம்பிக் புலி பொம்மை,புத்தகங்கள், நடிகர்களின் புகைப்படங்கள், மைதானத்தில் பிடித்த பேஸ் பால், டேப்-ரெக்கார்ட்கள், பரிசு கோப்பைகள், ரிக்கார்ட் புக்ஸ், அதன் மேல் சிப்ஸ் பேக்கட் அதை ஒரு கை எட்டி எடுத்தது.அந்த நேரத்தில் திரையில் தன் குழந்தையின் பெயர் தெரியாமலே அந்த கதாபாத்திரம் தன் நண்பன் மடியில் இறந்திருந்தார்.
‘டம்......’ பேக்கட் உடைந்து சிப்ஸ் சிதறி பறந்தது. பெரிய மூக்குக்கண்ணாடியுடன், வயதிற்கும் அதிகமாக முதிர்ந்த முகம்,பிரான்டட் வெள்ளை சட்டை,நீல நிற பேண்ட்,நீல நிற மேல் ஜாக்கெட்டிற்கு சொந்தமானவனின் கையில் இருந்தது அந்த சிப்ஸ் பேக்கெட். திரையில் ஏற்பட்ட திடீர் இறப்பினால் அதிர்ச்சியடைந்திருந்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.மற்ற நான்கு பேரின் பார்வை தங்கள் மீது சிதறிக்கிடக்கும் சிப்ஸ்க்கும், பின் பேக்கெட்டை வைத்திருந்தவனின் மேல் விழுந்தது.
தன் மூக்குக்கண்ணாடினுள் சிக்கியிருந்த சிப்ஸ் துண்டை அசைத்தெடுத்த அவன், “மன்னிச்சிடுங்கப்பா.”.இவன் பெயர் ‘யூ தொங் யங்’, சரியான குறிக்கோள் இல்லையென்றாலும் அவர்கள் தெருவிற்கு ‘counselor’ அவன் தான்.தெருவின் முதல் வீட்டில் இருப்பவன்.
கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தவன் “ஏய்.. லூசுப்பையனே. அப்பறம் தான் தின்னாத்தான் என்னா?”, என்று சலித்துக்கொண்டவனின் பெயர் ‘கிம் ஜங் ஆன்’. தெருவின் இரண்டாம் வீட்டின் மாடியில் இருப்பவன்.

பக்கத்தில் அமைதியான மழையில் நினைந்த நாய்க்குட்டியைப்போல் இருந்தவன் சிப்ஸ்களை தன் மேலிருந்து தள்ளிவிட்டுக்கொண்டான்.இவன் ‘சாய் தீக்’ இந்த அறைக்கு சொந்தக்காரன், பாடாக் (கொரியன் சதுரங்கம்) விளையாடுபவன்.அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது.ஹம்....வேறு எதுவும் தெரியாத முட்டாள்.மூன்றாம் வீட்டில் இருப்பவன்.
ஆன் “போய் திங்க எதனா எடுத்திட்டு வா”, தீக்கைப் பார்த்து.
“அப்படியே சமையலறையில பிரந்தி பார்த்தேன்! எனக்கு எடுத்துட்டு வா.அப்புறம் கூடவே பாலும்!”, யங்.
தீக் எழுந்து சென்றதும்.
“டேய்..அவனே ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு வந்துருக்கான்”
சொன்னவன் ‘சன் வூ’ இந்த தெருவில் இருப்பவர்களில் சாதாரனமானவன். நான்காம் வீட்டுப்பையன்.
“யா..எனக்கு அவங்க என்ன சொன்னாங்கன்னே கேட்கல!” என்று கத்திக்கொண்டு பக்கத்திலிருக்கும் ஆனை ஒரு குத்து குத்தினால் அந்த பெண்.
“அதுக்கு ஏன் என்னை அடிக்கிற?”, ஆன்.
“எனக்கு தெரியாது! நீ தான் காரணம்.”  பாஃப் தலைமுடியுடன் இருக்கும் இவள் ‘சங் தொக் சொன்’. இரண்டாம் வீட்டில் கீழ் தளத்தில்   இருப்பவள்.
“அந்த பேரு என்ன எலவுன்னு சொன்னாங்க?” தொடர்ந்தாள் கத்திக்கொண்டே.
“எங்களுக்கும் என்னன்னு தெரியாது!” ஆன்.
“அது ‘சுங் வூ யோன்’.” சன் வூ.
“உனக்கு எப்படிடா தெரியும்?” யங்.
“சப்-டைடில படிச்சேன்டா” சன் வூ.
சொல்லி முடிக்கவும்,கடிகாரத்தில் ஆறு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.அங்கிருந்த நால்வரும் திரும்பி அக்கடிக்காரத்தை பார்த்தார்கள். அருகில் தீக் கையில் தின்பண்டங்களோடு வந்து அறை வாசலில் நின்ற நேரம்.
“கிம் ஜங் ஆன்! சாப்பிட வாஆ..!.” என்ற பெண்ணின் அலறல் கேட்க.ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து முடிப்பதற்க்குள். “கிம் ஜங் ஆன்! சாப்பிட வான்றேன்ல”. அந்த அலறல் குரலுக்கு சொந்தக்காரர் ஆனின் தாய் ‘ரா மீ ரான்’, தன் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு கூக்குரலிட்டுக்கொண்டிருந்தார்.
“கிம் ஜங் ஆன்! சாப்பிட கூப்பிடறேன்ல!” மூன்றாவது முறை முடிந்த பிறகு சலித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
அடுத்த வாசலில் ஒரு பெண் வெளியே வந்தார். “சன் யூயா! சாப்பிட வா!” ஒரே முறை கூப்பிட்டுவிட்டு மெல்லிய புன்னகையுடன் உள்ளே சென்றார் ‘கிம் சன் யங்’ சன் யூவின் தாய்.
இரண்டாம் வீட்டு வாசலில், “ தொக் சொனா! சாப்பிட வா!” கூறிவிட்டு, இன்னொரு முறை கூப்பிடலாமா வேண்டாமா என யோசித்து, வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளே சென்றார் அவள் தாய் ‘லீ ல் வா’.
முதலில் எழுந்த ஆன், தட்டில் இருந்த மூன்று பொட்டலத்தின் ஒன்றை எடுத்துக்கொண்டு விடைப்பெற்றான். பின் தொக் சொன் தின்பண்டத்துடனும், சன் வூ எதையும் எடுக்காமலும்,யங் பாலுடனும் விடைப்பெற்றனர்.
தீக் அறையில் தனியே விடப்பட்டு, வெற்று அறையை ஒரு முறை பார்த்தான்.
அவன் பின்னால் , “தீக்கா! வா சாப்பிடலாம்” என்றார் தீக்கின் தந்தை ‘சாய் மூ சங்’  சிரித்த முகத்துடன்.
வெளியே சென்ற நால்வரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
சியோல்,தொபோங்-கூ,சாங்முன்-டொங் பிறந்து வளர்ந்தவர்கள் இவர்கள். இன்டர்நட், சமார்ட் போன் இல்லாத காலத்தில் எப்படி இவர்கள் நேரத்தை கழித்திருப்பார்கள் என்பது ஆச்சரியமே.
இரண்டாம் வீட்டில் கீழ் தளம். வசதி குறைவுடனும்,பாதி வீடு பூமியில் அழுத்தியிருக்கும் அரை பாதாள வீடு அது. இன்னும் சொனின் வீட்டில் சமைக்க கேஸ் ஸ்டவ் வாங்கவில்லை.
“தொக் சொனா. சாப்பாட எடுத்து வையி” அம்மா.
தொக் சொன் அம்மாவிற்கு உதவிக்கொண்டிருந்தாள். வெந்த சாத்தின் பதத்தை பார்த்த அம்மா, கிண்ணத்தில் போட்டு மூடி, “இது அப்பாவோடது.” என்று சொன்னிடம் கொடுக்க. அவள் சாதம் சூட்டுடன் இருக்க தன் படுக்கையறையில் உள்ள கனப்போர்வையில் வைத்திவிட்டு, அதன் மேல் படித்துக்கொண்டு படுத்திருக்கும் தன் ‘ சங் போரா’ அக்காவை முறைத்தபடி அவள் காலை வேண்டுமென்றே மிதித்து வெளியே சென்றாள்.
“யா..! சாகனும்னு ஆசையா?”, போரா. இவள் சியோல் பல்கலைகழகத்தில் கணிதம் படிக்கிறாள்.இவளுக்கு இந்த வீட்டில் அதிகம் அதிகாரம் செலுத்துபவள். சொனை பொறுத்தவரை ‘இந்த தெருவில் அரக்கி’.
“நீ வேணும்னே தானே காலை மிதிச்ச?”, போரா.
மீண்டும் போராவின் கால் மிதிப்பட, அருகில் மன்னிப்பு கேட்டபடி போரா, சொனின் தம்பி ‘சங் நோ ஓள்’ பாவமாய் பயந்து நின்றுக்கொண்டிருந்தான். வயதானவன் போல் இருந்தாலும் பதினேழு வயதுக்காரன்.
மேல் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே செல்பவனை பார்த்து,
“யா! எங்கடா வெளியே போற சப்பிடாம?”, சொன்.
“வீட்டுக்கு வர வழியில அப்பாவ பார்க்க”, என்று சென்றான் நோஓள்.
ஆனின் வீட்டில் மணி இரவு 6.55ஐ காட்டியது கடிகாரம். சொனின் வீட்டு மேல் தளத்தில்.ஆடம்பரமான பொருட்களோடு கொண்ட வசதியான வீடு.டைனிங் டேபிளில் கைகள் கட்டியபடி ஆன், அருகில் கையில் டெலிபோன் டைரக்டரியுடன் அமர்ந்திருந்தான் ஒருவன்.
உணவு கிண்ணத்தை டேபிளில் வைத்த ஆனின் அம்மா, ஒலிக்கும் தொலைபேசியை எடுத்தார்.
“ம்...!”
.......................
“நீ வீட்டுக்கு வர்றத்துக்கு முன்னே சாப்பிட்டு வரேன்னு சொல்லிறதுக்கு போன் பன்னேன்னு நினைச்சேன்” என்றார் கோவமாய்.
.............
“ம்.. சீக்கிரம் வா” என்று சாந்தமாய் கூறி தொலைபேசியை வைத்தார்.
டைரக்டரியை வைத்துவிட்டு, உணவு கிண்ணத்திற்கு கை செல்ல அது அங்கிருந்து எடுக்கப்பட்டது.
“கொஞ்சம் நேரம் உக்காருங்க.அப்பா வரேன்னு சொன்னாரு”, அம்மா.
எமாற்றத்தோடு கிண்ணத்தையே பார்த்தான் டைரக்டரி.ஆனோ சலிப்புடன் அமர்ந்தான்.
குழம்பை மீண்டும் சூடு செய்ய முயற்சிக்கும் போது தான் கேஸ் தீர்ந்துவிட்டதென்பது தெரிந்தது மீரான் அம்மாவிற்கு.உடனே சுவரில் ஒட்டி இருக்கும் ‘சங்முன் கேஸ் ஸ்டேஷன்’ நம்பருக்கு போன் செய்தார்.
“இது கேஸ் இடமா?”
..........................
“இங்க போங்கன்டல் தெரு,நீல கலர் கேட்டு வீடு”
............................
“ஆமா... நாய் இருக்கற வீடு தான்”
................................
“ம்... சாதாரணமா வங்கறது தான். 10 கிலோ இருக்குமே! அது.!”
........
“சரி” போனை வைத்துவிட்டு ரைஸ் கூக்கரில் சாதமில்லாததை பார்த்த மீரான்.
“ஜங் ஆனா! கீழே போயி ஒரு கிண்ணம் சோறு வாங்கிட்டு வா. இந்தா இதை அவங்ககிட்ட கொடுத்துடு”, என்று ஒரு உணவு வகையை ஆனின் முன் நீட்டினார். சிறிது நேரம் உற்றுப்பார்த்தவன்.
“சரி.” என கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்தான்.
           கீழே தொக்சொன் லாடிஸ் இலைகளை குழாய் தண்ணீரில் குனிந்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்க. ஆன் உள்ளே நுழைந்து அவளை பார்த்தான்.பின் வேறு திசையை பார்த்தபடி தன் இடது கால் முட்டியால் சொனின் பின்னால் ஒரு இடி இடித்தான்.
‘ட்டங்க.......’ என அப்படி கழுவ வைத்திருந்த சாமான்களின்  மீது சரிந்தாள்.
“யாஆ....” ஆனை பார்த்து கத்தினால்.அடுத்த வார்த்தை பேசுவதற்க்குள் ல்வா அம்மா வந்தார், “ஜங் ஆனா!”
“என் அம்மா இதை கொடுத்துட்டு வரச்சொன்னாங்க.” பாத்திரத்தை நீட்டினான்.
“வாஆ..! எதுக்குப்பா இதெல்லாம்” அம்மா.
“அது மட்டும் இல்லை.அம்மா கொஞ்சம் சாதம் கொடுக்க முடியுமான்னு? கேட்டுட்டு வரச்சொன்னாங்க.” ஆன்.
“ஆங்க்..கன்டிப்பா” அம்மா.
சாததை கிண்ணத்தில் போட்டுக்கொண்டே “உங்க அப்பா லேட்டா வர்றதா அம்மா சொன்னாங்க.ஆனா நான் நினைக்கிறேன் இதுவே இன்னைக்கு சீக்கிரம்னு” ல்வா அம்மா.
“ம்..ஆனா கொஞ்சம் இரு,அஜும்மா (வயதான பெண்களை கூப்பிடும் முறை) முள்ளங்கி ஊருகா தாரேன் எடுத்துட்டுப் போ”
வீட்டுக்குச் சென்ற ஆன் மீரான் அம்மாவிடன் ஊருகாயை கொடுத்துவிட்டு அமரப்போனவன்.
“வாஆ..! ருசியா இருக்கும் போல இருக்கே.ஜங்ஆனா ஒரு நிமிஷம்” அம்மா.
இதனை எதிர்பார்த்தவனைப்போல அப்படியே நின்றான்.
“இந்தா..” என்று இன்னொரு கிண்ணத்தை ஆனின் கையில் திணித்தார். வங்கிக்கொண்டு திரும்பியவன்
“அஜும்மா..! அம்மா இதை உங்ககிட்ட கொடுக்கச்சொன்னாங்க” என்று வாசலில் நுழைந்த சன்வூவை எதிர்க்கொண்டான்.
இருவரும் அர்த்தமான பார்வையை பரிமாறிக்கொண்டு, எதிரெதிர்திசையில்
சென்றனர். பின் ஆன் சன்வூ வீட்டிற்கும், சன்வூ சொனின் வீட்டிற்கும், சொன் சன்வூ வீட்டிற்கும் என பயனம் தொடர்ந்துக்கொண்டேயிருந்தது, தீக்கின் வீட்டில் அப்பாவும் பிள்ளையும் அமர்ந்திருந்த டைனிங் டேபிளில் சாதமும் குழம்பு மட்டுமே இருக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சைட் டிஷ்கள் வந்து சேர்ந்தது.
தெருவின் ஒரு பைக் வந்து நின்றது.
“கேஸ்ம்மா” மீரான் அம்மா புக் செய்த கேஸ் சிலிண்டர் எடுத்துவ வந்திருந்தான். அவன் உள்ளே சென்றான். வெளியே புதிதாய் சேர்ந்த யங்குடன் இன்னும் பகிர்ந்தளிக்கும் நால்வரின் பயணம் தொடர்ந்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு நடுத்தெருவில் நால்வாரும் ஒரே சமயத்தில் நிற்க.
“ பேசாமே கொடுக்கறத விட்டுட்டு, நாமலே சாப்டுட்டா என்ன? இவங்க நிறுந்த மாட்டாங்க போல இருக்கே!!!” ஆன்.
நல்ல யோசனையாய் மூன்று பசங்களும் திரும்பிச்சென்றனர். சலித்துக்கொண்டுத்திரும்பிய சொன் அப்பா தன் தம்பியுடன் வருவதை பார்த்தாள்.
“தொக் சொனா!” ‘சங் தொங் இல்’ அப்பா.
“அப்பா..!” உற்சாகத்துடன் அப்பாவிடம் ஓடினாள்.
கடந்துச்சென்ற சன்வூவின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, “என் செல்லப்பொண்ணே” சிரிப்புடன் அப்பா.
அப்பாவின் கையில் இருக்கும் கவரை பார்த்து, “ இது என்னப்பா பன்னி கறியா?” சொன்.
“ஆமாம்மா..நம்ம குடும்பத்துக்கு வயறு ரொம்பற அளவுக்கு வங்கிட்டு வந்திருக்கேன், இன்னிக்கு சம்பள நாளுல்ல. ஹி.. ஹி...” அப்பா.
“ஹி.. ஹி..” சொன்.
“வாங்க பசிக்கிது! போலாம்” அப்பா என வீட்டிற்கு சென்றனர்.
தொக்சொனின் வீடு. டிவியில் பாடிக்கொண்டிருக்கும் பாட்டை அப்பா,சொன்,நோஓள் மூவரும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தனர்.அருகில் புத்தகம் கையுமாய் கடுப்புடன் அமர்ந்திருந்தாள் போரா.
பாட்டு முடிந்து விளம்பரம் வந்தது.
அப்பா, “ஒமோ..! எப்படி ஒரு ஒலிம்பிக் ஐஸ்கிரீம் 200 வான்? ஆமால்ல வேல்டு கப் ஐஸ்கிரீம் 300 வானுல.ஹி..ஹி..” என்றார் அர்த்தத்தோடு நோஓளை பார்த்து.
“300 வானுல ஒரு சிகரேட் பாக்கெட்டே வாங்கலாம்”, அப்பா.
“இப்பெல்லாம் ஒரு சிகரேட் பாக்கெட் விலை 600 வானுப்பா. விலையை ஏத்தி ரொம்ப நாள் ஆச்சி”, நோஓள்.
அப்பா நோஓளின் பக்கம் திரும்பினார், “ டேய், நீ சிகரெட் குடிக்கிறியாடா? நான்  நினைச்சேன். நாயே “
இரண்டடி முதுகில் போட்டுக்கொண்டிருக்கும் போதே , “போரா அக்கா தான் அவளுக்கு வங்கிட்டு வர சொன்னாப்பா!!” என்றான் அழுதபடி.
போரா ஓரக்கண்ணால் நோஓளை பார்க்க...
அப்பா போராவை நம்பாமல் பார்க்க....
சொன் நக்கல் சிரிப்புடன் அக்காவை பார்க்க...
போரா தன் கையில் இருக்கும் புத்தகத்தை எடுத்து நோஓளின் தலையில் அடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன சொன்ன? என்ன சொன்ன நீ? நீ சிகரெட் புடிச்சா நீ தான் ஒத்துக்கனும் மத்தவங்க தலையில கட்டப்பாக்கற !!! சாவடிச்சிடுவேன் லூசுப்பயனே” அடித்து ஒதைத்தபடியே கத்தினாள் போரா.
“டேய் பொறுக்கி, சிகரெட் குடிக்கிறதானே நீ?” அப்பாவும் இரண்டு போட.இரண்டு பேரையும் பார்த்த நோஓள், “ஆமா! நான் தான் குடிக்கிறேன்,சரியா சொன்னிங்க நான் தான். ஹா..ஹா...நல்லா கேட்டுக்கங்க நான் சிகரெட் குடிக்கிறேன்”
போரா தப்பித்தேன் பார்வை பார்த்தாள்.
“இருடா சாப்பிட்டு வரேன்,அடி பின்னரேன் பாரு, ல்வா வேலைய முடிச்சிட்டியா? சீக்கிரம் வா”, அப்பா.
ல்வா அம்மா ஒரு பெரிய பாத்திரத்தின் லாடிஸ் இலைகளின் கோபுரமாய் எடுத்துவந்து மற்ற உணவுக்கு நடுவில் வைத்தார்.
“நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு கொடுத்துட்டு இவ்வளவு தான் மிச்சமிருந்துச்சி, இன்னும் வேனும்னா ஏங்கிட்ட சொல்லுங்க” அம்மா சிரித்துக்கொண்டே.
நால்வரும் விழித்தனர்.
“முதல்ல எவ்வளவு இருந்திச்சி? நாம என்ன மாடா இலையையே தினமும் தின்ன?, என் சம்பள பணமெல்லாம் எங்க போகுதுன்னே தெரியல!! இல்லை எல்லா காசுலையும் காய்கறிங்களே வாங்கிட்டியா என்ன? ம்ம்...”, அப்பா.
“ஆமா...ஆமா.. இப்படி நாம பேசறத பார்த்தா மத்தவங்க சண்டை போட்டுக்கிறதா தான் நினைப்பாங்க. ஹி..ஹி.. குடுங்க குடுங்க அதை குடுங்க”, அம்மா குழைந்தபடி.
“ல்வா சாப்பிட்ட அப்பறம் பார்த்துக்கலாமே, இங்க பாரு! நமக்காகவே நல்லா பெரிசா விளைஞ்சி காத்திருக்கு காய்கறிங்க, முதல்ல இதை கவனிக்கலாம்.சரியா”, அப்பா.
“ம்..ம்.. குடுங்கன்னா” என்று கூறியபடி அப்பாவின் பாக்கட்டில் இருந்து மணிபர்ஸை எடுத்து அதிலிருக்கும் பண உறையை எடுத்தார்.
“அய்கோயா...!!! இதை பாரு ! எவ்வளவு பெருசா இருக்கு! இந்த மாசம் எவ்வளவு வந்திருக்கு?” உறையின் மேல் எழுதி இருக்கும் பண்விவரங்களில் பார்வையை ஓட விட்டார்.பின் பிரித்து எண்ண ஆரம்பித்தார்.அம்மா எண்ண எண்ண அப்பாவின் முகத்தில் பயம் தாண்டவமாட ஆரம்பித்தது.சிறிது நேரத்திலேயே அம்மாவின் முகம் முறைப்புக்கு மாறியது.
“நாலு,மூணு,ரெண்டு,ஒன்னு!” முணுமுணுத்தார் அப்பா.
“ஏங்க....” அம்மா.
காதில் வாங்காத்தைப்போல் டிவியில் வரும் விளம்பரப்பாட்டை பாட ஆரம்பித்தார்.
“போரா அப்பா!” என அதட்டினார் அம்மா.
இன்னும் அதிகமாக சத்ததுடன் பாடினார்.
தொடையில் ஒரு கிள்ளு.
“ஆஆஆர்க்......................” பாட்டு நின்றது.
“12,000 வான் குறையுது என்னப்பன்னிங்க” அம்மா.
“யா.. யா.. யா.. ரெண்டு புஸ்தகம் வாங்கனேன். அந்த சக்ஜின் இல்ல,யங்சலோட பையன்.அவன் யாருக்கோ கேரண்டி கையெழுத்துப்போட்டு ஏமாந்து போயிருக்கான், அதனால பாங்க் எல்லாத்தையும் புடிங்கிடு இருக்காங்க.இப்ப அவன் புஸ்தகங்க வித்துட்டு இருக்கான்.எப்படி சும்மா வர முடியும்?” , அப்பா.
“அவன் மட்டும் தான் ஏமாந்தானா? ஆங்...!! நாமளும் அதை மாறி தானே ஏமாந்தோம்,கடனாளியா இருக்கோம்.மத்தவங்களுக்கு உதவி பன்ற சூழ்நிலைலயா நீங்க இருக்கிங்க? யாரு யாருக்கு உதவி பன்னுறது ”, அம்மா.
“நமக்கு என்ன குறைச்சல்? போதுமான அளவுக்குதான் எல்லாம் இருக்கே” எதிரிருக்கும் லாடிஸ் இலைகளை காட்டி அப்பா சொல்ல.
“ஏதோ சமாளிக்கிறோம் அவ்வளவு தான்.இன்னும் நோஓள்,சொன்னோட அடுத்த வருஷ ஸ்கூல் பீஸு கட்டல.அப்பறம் போரா காலேஜ் பீஸு?.என்னை கெட்டவளா காட்டவே முயற்சி பன்றிங்க.வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரு கப் காப்பி கூடுக்காமே ஒவ்வொரு வானா மிச்சம் புடிச்சி சேர்த்துவெக்கிறேன்,நீங்க இந்த தெருவுக்கே நல்லது செய்யறவரு நான் தான் கெட்டவ இங்க?.” அம்மா.
“நீ இருக்கயே! நாம எதைப்பத்தி கவலைப்படனும் சொல்லு? நம்மகிட்ட பணமும் இருக்கு,கடனும் இருக்கு! இங்க பாரு நீயும் நானும் ஆரோக்கியமா தான் இருக்கோம்,நம்ம மூணு பசங்களும் ஆரோக்கியமா தான் இருக்காங்க,நல்லாவே படிக்கிறாங்க என்ன பிரச்சணை?”, அப்பா.
“தொக்சொன் இந்த வாட்டி ஸ்கூலையே 999வது இடம்,அப்பறம் நோஓள் 1000வது ரேங்க்.நான் முட்டாள் பசங்களேல்ல பெத்துப்போட்டிருக்கேன்.” அம்மா.
“நம்ம மூத்தப்பொண்ணு போரா! நல்ல புத்திசாலிதானே! கொரியாலையே தரமான காலேஜ் சியோல் பல்கலைகழகத்துல தானே படிக்கிது!நானே அவ்வள்வு வருத்தப்படாதப்போ, நீ ஏன் கவலைப்படற சொல்லு?” அப்பா.
“எனக்கு புது மூக்குக்கண்ணாடி வங்கிதாங்க”, போரா திடீரென.
“புதுசு வாங்கி ஒரு வருஷம் கூட ஆகல?” அப்பா.
“கண்ணு பவர் ஏறிப்போச்சி,சரியா பார்க்க முடியாததாலே, சரியா படிக்க முடியில.அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருது அதுக்கு பரிசா இதை வங்கி குடுங்க” போரா.
உடனே கையைத்தூக்கிகொண்டு , “நான் இந்த வருஷம் என் பிறந்த நாளே தனியா கொண்டாடப்போறேன்.கன்டிப்பா அக்காக்கூட கொண்டாட மாட்டேன்.சரியா?” சொன்.
“அப்படியே போட்டேன்னா ஒன்னு.உனக்கும் அவளுக்கும் பிறந்தநாள் மூணு நாளு தானே வித்தியாசம்!ஏன் ரெண்டு தடவை செலவு பன்னனும்?” அப்பா.
“வாங்கி தருவீங்கல்லே கண்ணாடி? அம்மா?” போரா.
“விலை அதிகம்மா அது!” அம்மா.
“பார்க்க முடியிலன்னு சொல்லுறேன்ல! போர்டு சரியா தெரியலம்மா!” போரா.
“எனக்கு நல்லா தெரியுதும்மா. நான் இந்த தடவை தனியா தான் கொண்டாடப்போறேன்!”.சொன்.
“யாஆ... அக்கா பேசிட்டு இருக்கேன்ல!” போரா.
“போடி” சொன்.
“என்ன போடியா?“ அவ்வளவு தான். போராவின் கை நேராக சொனின் தலைமுடியை கொத்தாக பிடித்தது.
“இங்க வாடி.” போரா.
“ஆஆஆ........அம்மா இங்கப்பாரும்மா இவ என்ன பன்றான்னு.ஆஆக்க்க்க்.....” சொன்.
“என்னது ‘இவ’ளா?” கழுத்தை கையால் வளைத்தப்படி போரா, “சொல்லு இன்னோரு தடவை சொல்லு.”
“ஆஆஆஆ.......”
“விடுடி அவளை.எல்லாம் முடியும் பிச்சிடப்போறே போரா!”, செய்வதறியாது அம்மா கூறினாள்.
குடிமிப்புடி சண்டை தொடர்ந்துக்கொண்டிருக்க....
“இந்த வீட்டுல அமைதியா ஒரு நாள் வழமுடியுதா? அது தான் என் ஒரே வேண்டுதல்!” என்று அழுதபடியே அருகில் இருந்த லாடிஸ் இலையை எடுத்து மூக்கை சிந்திப்போடார் பின் ,” அம்மாஆஆஆ.....”.

           ஆனின் வீட்டில் தந்தைக்காக காத்திருந்து மூவருக்கும் சாப்பிடாமல் நேரம் கரைந்துக்கொண்டிருந்தது.கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும்.
“அப்பா வந்துட்டாரு” என்றவுடனே சாப்பாட்டை எடுத்துவைக்க மீரான் அம்மா உள்ளே செல்ல.
இரு பிள்ளைகளும் முறைப்பாய் கூலிங் கிலாஸ் அணிந்தபடி உள்நுழைந்த ‘கிம் சங் யன்’ அப்பாவை, “வாங்கப்பா”
கண்ணாடியை கழற்றி கிழே போட்டார். உடனே உற்சாகமாய் பாடிக்கொண்டே ஆட ஆரம்பித்தார்.அது அவருடைய தனி பாணியான வரவேற்ப்பு நடனம்.பதில் நடனத்தை அவர்களிடம் எதிர்பார்த்து அசைவுடன் நிற்க.எந்த முக மாற்றமும் இல்லாமல்.
“வாங்க பசங்களா சாப்பிடலாம்”, அம்மா.
“சாப்பாட்டுக்கு நன்றி”, இருவரும்.
இவரை பொருட்டாக கருதவில்லையென்னு தெரிந்ததும்,முகம் தொங்கியது சங் யன் அப்பாவிற்கு.
தன் மூக்குக்கண்ணாடியை அணிந்தபடி டைனிங் டேபிள் அருகில் சென்று,தன் மனைவியின் தோலை ஒற்றை விரலால் சுரண்டி, “நீ ‘சரிதான் சரிதான்’ அப்படின்னு பாடனும் மீரானா!”
“உங்க சாப்பாட்டை டேபிள்ல இருந்து எடுக்கனுமா என்ன?” அம்மா முறைக்க.
“சலேட் செஞ்சிருக்கே போல?” பின்வாங்கினார்.
“ஓ...பலியாடுன்ற பேருலக்கூட ஆளு இருக்காங்க பாருங்கலேன்! அச்சரியமா இருக்கு” டைரக்டரியில் பார்த்து கூறினான் இவன் ‘கிம் ஜங் பூங்’ ஆனின் அன்னன், 24 வயது, கல்லூரி நுழைவுத்தேர்வை ஆறாவது முறை எழுதப்போகிறவன்,அனைத்திலும் ஆர்வம் அதிகம் படிப்பைத்தவிர.
“ஆனா தொக்சொன் பிக்கட் கேளா இருக்கப்போறாலாமே,அதுக்கு எதனா டெஸ்ட் வப்பாங்களா,சரியா படிக்கக்கூட மாட்டாளே எப்படி அவளை தேர்ந்தெடுத்தாங்க” என்றால் ஆர்வமாய்.
“எப்படியோ எடுத்துக்கிட்டாங்க” ஆர்வமில்லாமல்.
அம்மாவின் முகம் மாறியது.
“யாக்..இது சன்வூ அம்மா கொடுத்தது தானே! ஆ... குழம்பு ரொம்ப கொடுமையா இருக்கே” அப்பா.
“எப்படி தெரியும்?” அம்மா.
“அதுதான் நல்லா தெரியுதே ருசி!” என்று உதட்டை கோணலாய் வளைத்துக்காட்ட, மீரான் அம்மா அவர் அருகில் இருந்த சாதக்கிண்ணத்தை எடுத்து சென்றுவிட்டார்.
“நான்  நிறுத்திடறேன் மீரானா!” கெஞ்சி பயனில்லை.
“நான் செய்யறதெல்லாம் சிரிப்பு வரல?” முணுமுணுத்தார் உதட்டை கோணலாய் வளைத்தபடி.

சன்வூவின் வீடு.
சன்வூ, 6 வயது ‘ஜின்ஜு’ தங்கையுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
“சன்வூயா சப்பாடு நல்லா இருக்கா?” அம்மா.
“நல்லா இருக்கு, ஆ..”
“கல்லா”
“ம்..அப்பாக்கு இது சுத்தமா பிடிக்காது” சிரித்தபடியே.
“தெரியும்டா” சிரித்தார்.
இன்னும் குழம்பை பிள்ளையின் தட்டில் ஊற்றியபடி, “ தொக்சொன்க்கு ரொம்ப கஷ்டபடறா போல, கருத்துப்போயிருக்கா,கஷ்டத்தை பொறுத்துக்கறதும் நல்லது தான்ல?”
“பின்ன என்னம்மா, மூணு பொண்ணுங்களிலே இவளைத்தானே பிக்கெட் கேர்லா எடுத்திருக்காங்க,இந்த வெயில்ல கிட்ட்தட்ட எரிஞ்சிப்போற அளவுக்கு இல்ல பயிற்சி இருக்கு”
“அவ எந்த நாட்டுக்காக முன்னாடி நிக்கிறா? திருப்பியும் சொல்லு மறந்திட்டேன்”
“நீங்க மறுபடி சொன்னாலும் மறக்கத்தான் போறிங்க. உண்மையா எனக்குக்கூட நாடுன்னு தெரியலம்மா” என்றவன்
“செல்ல ஜின்ஜு சாப்டுட்ட போல!”.
இவர்கள் பேசிய தொக்சொன்.கையில் ‘மடகாஸ்கர்’ என எழுதிய பலகையுடன் பாட்டிற்கு ஏற்றார்போல் இடுப்பை வைத்து ஆடியபடியே நடந்துக்கொண்டிருந்தாள்.அருகில் நாற்காலி புத்தகதுடன் போரா. ஆடிய படியே பலகையை சுழற்றினாள்,அது சரியாக போராவின் தலையை பதம்பார்த்தது.இரண்டு நொடிகள் தான். மீண்டும் குடிமிப்புடி.போராவின் கையே நீண்டிருந்தது.
“அமைதியா இருக்கமாட்டே? ஆங்..”
“ஆ....ஆ.....”
தலையனையால் அடித்தபடியே “நாட்டரசோட திட்டத்தில இருக்கன்னு பீத்தறயா? நம்மநாடு நடத்தற மூளைச்சலவைல கலந்துக்கிறன்னு சந்தோஷமா? இந்த ஒலிபிக்கால எத்தனை பிரச்சனைத்தெரியுமாடி?”
“என்னத்த பத்தி பேசற?!!!!! ஆ....ஆ....ஆ”
புயலுக்குப்பின் அமைதியாக காலை விடிந்தது.
[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 8 நாட்களுக்கு முன்]
மூசங் அப்பா தெரு வாசலை பெருக்கிக்கொண்டிருந்தார்.
சன்வூவின் வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருக்க,அதன் முன் பெரிய கோலா பாட்டலில் ஸ்ட்ரா போட்டு குடித்துக்கொண்டிருந்தாள் ஜின்ஜு.
பள்ளிக்கு தயாராகி ஹாலுக்கு வந்த சன்வூ,ஜின்ஜுவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, “ஜின்ஜு, அன்னா போய்டுவரேன்” திரும்பி “அம்மா, நான் வரேன்”
“சன்வூயா சாப்பாடு எடுத்துட்டு போப்பா”
“ஆங்க் அம்மா! எனக்கு ஒரு 1000 வான் குடுங்கம்மா.ஸ்கூலுக்கு வேணும்”
“எதுக்கு வேணும்?”
“கிலாஸ் டீச்சருக்கு கல்யாணம்.அவங்களுக்கு எதனா பரிசு குடுக்கலாம்னு கிளாஸ்ல கலெக்ட் பன்றோம்.அதுக்குத்தான்”
“உண்மையாவா? அந்த வரலாறு டீச்சரையா கல்யாணப்பன்னிக்க போறாங்க?”
“ஆமா”
“அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்?!! பெரிய பிரச்னைக்கூட ஆச்சின்னு கேள்விப்பட்டேன்”
“ஆமாம்மா.ஆனா அவங்களுக்கு குழந்தை பிறக்கப்போகுதாம்” சிரித்தபடி.
“உண்மையாவா? ஹி..ஹா..ஹா...எவ்வளவு தர்மச்சங்கடமா இருக்கு இது! ஐயோ !!!” என தர்மசங்கடமாய் சிரிக்க.
“அம்மாக்குக்கூட இது மாறி தானே நடந்திச்சி!”
சிரிப்பு நின்றது.
“எவ்வளவு வேணும்?”
“1000 வான்” சன்வூ சிரித்தபடியே.
ஆனின் வீடு.
புதிய ஸுவை காலில் போட்டபடி அம்மாவிடம், “ அம்மா எனக்கு கொஞ்சம் பணம் வேணும்”
“எவ்வளவு?”
“30,000 வான்”.
..........................
தொக்சொனின் வீடு.
“அம்மா! எனக்கு முட்டை தோசை வேணும்.”, போரா.
“அம்மா, எனக்கும்” நோஓள்.
பிரிஜ்ஜை திறந்த அம்மா, இரண்டே முட்டை மட்டுமே இருந்தது. அருகில் டப்பியில் சாதத்தை போட்டுக்கொண்டிருந்த சொனை பார்த்தார். தன்னை அம்மா பார்க்கிறார் என்று தெரிந்த சொன், “பரவாயில்லை.எனக்கு முட்டை வேனா.” அமைதியாக.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.அப்பா தனக்கு முட்டை இல்லையென்பதை கவனித்தார்.அம்மா, “சொனா உனக்கு காராமணி பிடிக்கும்ல? இந்தா சாப்பிடு”
கிண்ணத்தை அவளருகில் வைத்தார்.அமைதியாக சாப்பிட்டாள் சொன்.
“நம்ம பசங்களுக்கு யுனிபார்ம் இல்லன்னா நல்லா இருக்கும்.அது ஒரு டேவையில்லாத செலவு”, அம்மா.
“அடுத்த வருஷம் சொன் அக்கா ஸ்கூல்ல யுனிபார்ம்தான்.” நோஓள்.
“இவ எங்க போகப்போறா? பெயிலாகத்தான் போற.” போரா.
“ஆங்..சொனா இன்னிக்கும் பாதி கிளாஸ் தான் நடக்குமா உனக்கு? அந்த ஒலிம்பிக் விஷயமால” அப்பா.
“ஆமா.ரெண்டாவது பிரியடப்போ போகனும்” சொன்.
“இந்த நிலைமைல சரியா காலேஜ் எக்ஸாமுக்கு படிக்கமுடியுமா?”, அப்பா வருத்ததுடன்.
“கண்டிப்பா போகமுடியாது. அதுவும் 999வது ரேங்க்னா எப்படி போகமுடியும்?”, போரா.
“ஏய்..” சொன்.
“ஏயா?” போரா.
“யா..யா.. அமைதியா சாப்பிடுங்க. ம்.. சரியா” அப்பா பயத்துடன்.
“நம்ம சொன் அடுத்த வாரம் வரை கஷ்டப்படனும்ல? வாஆ நம்ம பொண்ணு உலகம் பூரா டிவில வரப்போரா! சந்தோஷமா இருக்கு.” அம்மா.
“நான் அழகா இருக்கேன்ல,அதனால தான்” சொன்.
“லூசுங்க” முணுமுணுத்தான் நோஓள்.
“இவ அழகை பத்தி பேசும்போது தான் எனக்கு நம்ம சொன் பொறந்தப்ப மென்னு துப்பன சாப்பாடு மாறி இருந்தான்னு எவ்வளவு அழுதோம் ராத்திரியெல்லாம். ஹா ஹா. அப்பா சொல்ல அம்மாவும் சேர்ந்து சிரித்தனர்.
“அம்மா,அசிங்கமான குழந்தைதான் பின்னாடி அழகா இருப்பாங்க,சின்ன வயசுல அழகா இருந்து என்ன பிரியோஜனம்” போராவை பார்த்து உதட்டை சுழித்தபடி சொன்னாள் சொன்.
“ஏய், சொங் தொக்சொன். உன் உதட்டுல என்ன? அது என்னதுல்ல.” போரா.
விழித்தபடி’ “இல்லையே.” சொன்
“என்னது தான்” போரா.
“இல்லென்றேன்ல” சொன்.
“பொய் சொல்லுற நீ!”
“இல்லென்றல”
“நீ என் மேக்கப் பொருளை எடுத்தே. கொன்றுவேன். தெரிஞ்சிக்க.புரியுதா?” போரா.
சொன் போராவையே முறைத்துப்பார்த்தாள். பதில் வரவில்லையென்றவுடன்
“புரியுதான்னு கேக்கறேன்ல!”
................
“ஏய், சொங் தொக்சொன்!” என போரா கத்த.
நடுக்கத்துடன், “ஆங்க்..சரி” சொன்.
இடம் அமைதியானது.
அப்பா மெதுவாக நோஓளின் கிண்ணத்தில் இருந்த முட்டைதோசையை எடுத்து ஒரே வாயாக சப்பிட்டார். பாவமாய் பார்த்தான் நோஓள்.
போரா கல்லூரிக்கு சென்றப்பிறகு.அறைக்கு வந்த சொன்.போராவின் மேக்கப் பொருட்களை எடுத்து அவள் முகத்தை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.கண்ணாடியில் பார்த்தாள். திருப்தியடைந்தாள்.
[சங்முன் மேல்நிலைப்பள்ளி]
“கிளாஸ் லீடர்” வகுப்பாசிரியை.
சன்வூ எழுந்தான்.
“அட்டேன்ஷன், நன்றி” சன்வூ சொல்ல மற்ற மாணவர்களும் பின்பற்றினர்.
ஆசிரியை வெளியே சென்றவுடன்.
அவரவர் தங்கள் சாப்பட்டுக்களை பிரிக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் யங்கும் ஆனும் அவசரமாய் வாயில் போட்டுக்கொண்டிருந்தனர்.
“மேதுவா தான் சாப்பிடேன்டா”, சன்வூ.
“சீனியருங்க காத்துக்கிட்டு இருப்பாங்கடா.சீக்கிரம்!” சொன்ன யங் பக்கத்தில் இருந்த மாணவனுடைய சூப்பை எடுத்து குடித்தான்.
“நமக்கு ஆள் குறையுதுடா! நீ வரலன்னா நாமே செத்தோம்டா”, ஆன்.
“நீ வெளியே பார்க்கல?கொளுத்தர வெயில்லே சாக்கரா? மயக்கம் தான் வரும்” சன்வூ.
[ஆயோசாங் ஸ்டேடியம்]
கொளுத்தும் வெயிலில் ஒலிம்பிகில் கலந்துக்கொள்ளும் பிக்கெட் பெண்கள் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.
“லெஃப்ட் ரைட்! லெஃப்ட் ரைட்! தோளை சரியா வை.நேரா நட.ம்.. ம்..” ரொமனியாவின் பெயர் பலகையை துக்கிக்கொண்டு நடந்துவந்த பெண்ணுக்கு பயிற்சியாளர் பயிற்சியளித்துக்கொண்டிருந்தார்.
மடகாஸ்கர் பலகையுடன் சொன் அடுத்து வந்தாள். தான் எதிர்ப்பார்த்ததுக்கு நேர்மாறானா நிலைமையின் சிரிக்கக்கூட முடியவில்லை.
“நல்லா சிரி!. நேரா பாரு! சிரி ! கையை ஒழுங்கா வை ” பயிற்சியாளர்.அவர் சொல்வதை கேட்க முயற்சி செய்துக்கொண்டிருந்தாள்.
[சங்முன் மேல்நிலைப்பள்ளி]
“சீக்கரம் சாப்பிடுடா!” ஆன் சன்வூவை பார்த்து.
“முடியாதுடா!” சன்வூ அவசரமாய் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து.
திடீரென பெரும் சத்ததுடன் ஒருவன் எதிராமர்ந்தான்.கிண்ணத்தினில் தலைவிட்டிருந்த யங்கிற்கு அதிர்ச்சியளித்தது.
“யா!!!மைக்கல் பயந்துட்டேன்டா நாயே!”, யங்.
“நான் என்னடா செய்ய இப்ப?” மைக்கல்.
“என்னடா ஆச்சி?” சன்வூ.
“நம்ம கலெக்ட் பன்ன பணம். திருடுபோய்டுச்சிடா!” மைக்கல்.
அதிர்ச்சியுடன், “என்ன?” கோரஸாக.
“ஏன்டா காசை தூக்கிட்டு வெளியே சுத்தனே? லூசு” யங்.
“இப்படி நடக்கும்னு எனக்கு எப்படிடா தெரியும்? அவங்க தோபூங் ஸ்டோர்ல டீ செட்டு வித்திட்டு இருந்தாங்கடா. வழிதெரியாம வேறபக்கமா போனது தெரிஞ்சி, திரும்பி அந்த வழியா திரும்பி வந்தேனா! அது ஒரு ரைஸ்கேக் விக்கற இடமா மாறிபோயிருந்ததுடா!!!” மைக்கல்.
அனைவரும் வருந்தினர்.
“நல்லா மாட்டி இருக்கேடா நீ! பணம் இருக்குன்னு தெரிஞ்சிதான்டா இப்படி நடந்துருக்கு” ஆன்.
“எல்லா காசும் போச்சாடா?” சன்வூ.
தலையசைத்தான் மைக்கல்.
“எல்லாமே போச்சிடா! மொத்தம் 63,000 வான்.இப்ப என்ன செய்யடா? நாளைக்கு பரிசை கொடுக்கனுமே! எங்கிட்ட ஒரு வான் கூட இல்லைடா!” மைக்கல் யங்கை பார்த்து.
“என்கிட்ட கூட இல்லைடா” யங்.
திடீர் யோசனை தோன்றியவனாய் சன்வூ ஆனைப்பார்த்து , “உங்க அம்மாகிட்ட இருந்து எவ்வளவுடா வாங்கனே?”
“ஏன் சாகனும்னு ஆசையா?” ஆன்.
அடுத்த வார்த்தை பேசுவதற்க்குள்.
“ஏய்! கிம் ஜங் ஆன்!”
ஆன் திரும்பினான்.
“சீக்கிரம் வெளியே வா” அதட்டினான் சீனியர்.
“இதோ வரேன்” ஆன் சொன்னவுடன் சன்வூம் யங்கும் டேபிளில் படுத்துவிட்டனர்.
சீனியரை ஒரு பதற்றப் பார்வை பார்த்துவிட்டு ஆன், “ டேய்! எழுந்திடுங்கடா”
எழவில்லை..
“சீக்கிரம் எழுந்திடுங்கடா”
காலால் டேபிளை உதைத்து எழுப்பமுற்பட்டான்.ம்ஹும் பயனில்லை.
“ஏய்! கிம் ஜங் ஆன்! சாகனும்னு ஆசையாடா?” கத்தினான் சீனியர்.
“இதோ வரேங்க!” ஆன்.
பதற்றத்துடன் வெறுப்பாய் தன் மணி பர்ஸை மைக்கலிடம் தூக்கியெறிந்தான். உடனே மற்ற இருவரும் எழுந்து அவனுடன் சென்றனர்.
“வாடா போலாம்!” சன்வூ.
[குறிப்பு: அடுத்த பெஞ்சுக்கு அருகில் உள்ள ஒரு திறந்த பையில் புதியதாய் விலையுயர்ந்த புத்தகம் ஒன்று இருக்கிறது]
தெரு திண்ணை.
“என்ன? 30,000 வானா?” ல்வா அம்மா.
“ஆமா” மீரான் அம்மா.
“மீரானா! வெறும் 1000 வான் தானே! அவங்கிட்ட எதுக்குன்னு கேட்டுட்டு கொடுக்க வேண்டியது தானே! அதை வச்சி எதனா தப்பான காரியம் செஞ்சா என்ன பன்னறது? ” சன்யங் அம்மா.
“எனக்கு தெரியும்.அவனுக்கு கண்டிப்பா எதனா தேவைப்படும் சன்யங்கா.அங்கப்பாரு ஜின்ஜு மேக்கப் போட்டுக்கிறா” மேல் சட்டையை கழட்டி வைத்த மீரான்.
மூவரும் ஜின்ஜுவை பார்த்தனர்.அவளிடம் இருந்து வாங்கிய சன்யங், “இந்த பொண்ணு யார் மாதிரின்னே தெரியல? அவளே அவளை பார்த்துக்கிறா”
“உன்பொண்ணு உன்னைமாறி தான் இருப்பா!” ல்வா.
“அந்த பணம் க்ளாஸ் டீச்சர் கல்யாண பரிசுக்காக சேர்த்தது.அவங்க டீச்சரு லவ்வருக்கூட கைக்கோர்த்து நடந்து போறப்ப, மைக்கல்ன்ற பையன் பார்த்து மாட்டிக்கிட்டாங்க.” சன்யங்.
“உனக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியுது?” ல்வா.
“எல்லாம் என் பிள்ளை சன்வூ சொன்னது தான். எங்களுக்குள்ள இது ரகசியம். ஹி...ஹி...” சன்யங்.
“அவனுக்கு நீ தொந்தரவா இருக்கற!” மீரான்.
“இல்லை..இல்லை.. நான் கேட்காமலே தான் சொல்லுவான். வீட்டுக்கு வந்து எதுவும் பேசாமப்போற் ஜங்ஆன விட 100 மடங்கு என் பிள்ளை பரவாயில்லை.எப்படி நீ சமாளிக்கற?” சன்யங்.
“அப்படியில்லை.அவனுக்கு தேவைன்னா பேசுவான்.” மீரான் சற்று முக வாட்டமாக.
ஊர்வம்பு கதைகளை தொடர்ந்தனர்.
தெரு முனையில் வந்துக்கொண்டிருந்த தொங் இல் அப்பா, பெண்கள் ஊர்வம்பு பேசுவதை பார்த்து வெறுப்படைந்தவர் வழியில் இருந்த கற்களை காலால் உருட்டினார்.
“போரா அப்பா வந்துட்டாரு போல! போ.. போ.. பசங்கக்கூட வீட்டுல இல்லை. போ போய் அனுபவிங்க” மீரான் சிரித்தபடி.
“என்ன சீக்கிரமா வந்திட்டிங்க?” ல்வா அப்பாவை பார்த்து.
“எதுக்கு பொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கத்தான். ஹி.. ஹி..” சன்யங் கிண்டலாய்.
இருவரும் உள் செல்லும்போது அப்பா, “இந்த பொம்பளைகளை ஒரு நாள் கொல்லப்போறேன் பாரு! வாய் ரொம்ப ஜாஸ்தி ஆய்டுச்சி.வா அவங்க சொன்ன வேலையைப் பார்க்கலாம்!”
வெளியே...
“உங்க வீட்டுக்காரரு லேட்டு போல” சன்யங்.
“அவரு யார்கிட்டயாச்சி தன்னோட மட்டமான ஜோக்கை அடிச்சிட்டு இருப்பாரு” மீரான்.
[பொங் வாங் தாங் வாட்ச் ஸ்டோர்]
மூசங் அப்பா தன் கடையை மூடிக்கொண்டிருந்தார். மூடிய கண்ணாடி வாசக்கதவில் நிழலாடியது, சங்யன் அப்பா நின்றிருந்தார். தன் மட்டமான ஸ்லேப் ஸ்டிக் காமெடியை காட்ட. முகம் மாறிய மூசங் வெறுப்புடன் திரையை மூடினார்.
சங்யன் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.
தெரு திண்ணையில் அமர்ந்திருந்த மனைவியிடமும் தன் மொக்கையைப் போட்டு லாடிஸ் இலைகளால் அடிவாங்கினார்.
[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 7 நாட்களுக்கு முன்]
[சங்முன் மேல்நிலைப்பள்ளி]
பள்ளி மணி அடித்தது.
“நாளைக்கு லீவுன்னு ஊர் சுத்தாதிங்க. வீட்டுல ரிபோர்ட் கார்டை காட்ட மறக்காதிங்க! சரியா?” என்றார் வகுப்பாசிரியை.
அனைவரும் ஆமோதிக்க
“கிளாஸ் லீடர்” வகுப்பாசிரியை.
சன்வூ எழுந்தான்.
“அட்டேன்ஷன்” சன்வூ சொல்ல
“டீச்சர்! திருமண வாழ்த்துக்கள்” என மற்ற மாணவர்கள் ஆரவாரம் செய்ய, தனக்கு கொடுத்த பரிசுடனும் வெட்கத்துடனும் வெளியேறினார்.

“எங்கிட்ட குறைவா இருக்கேடா! உங்கிட்ட எவ்வளவு இருக்கு?” ஆன் யங்கிடம்.
“ஒன்னு,ரெண்டு,மூணு,நாலு,அஞ்சி மொத்தம் 500 வான் இருக்குடா” யங்.
“இது போதும் வா போலாம்” ஆன்
“எங்கடா போறிங்க?”, சன்வூ.
“மார்கெட்டுக்கு, நீ வரயா?” ஆன்.
“இல்லை! நீங்க போங்க. நான் ஜின்ஜுக்கூட விளையாடறதா சொல்லி இருக்கேன்” சொல்லிவிட்டு சென்றான் சன்வூ.
“ஏன்டா இவன் நம்மக்கூட வர மாட்டேன்றான்?!!!” யங்.
ஆனும் யங்கும் கடைத்தெருவிற்கு சென்றுக்கொண்டிருக்க...
“இருடா நான் பாத்ரூம் வரை போய்ட்டு வரேன்” ஆன்.
“சரிடா”, என்றான் சென்றுக்கொண்டே.
“டேய்!! ஒன்னாப் போலாம் இருடா!”
“மூணாவது மாடிக்கு வந்துடுடா.நான் முதல்ல போறேன்”.
சலித்துக்கொண்டு ஆன் சென்றான்.
திரும்பி வந்தவன் புதிய இருவர் யங்கின் தோலின் மீது கைப்போட்டப்படி, கடைத்தெருவின் வேற்றுப்பாதையில் இட்டுச்சென்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தான். பின் அடுத்த தெருவில் ரைஸ் கேக் கடையிருப்பதைப் பார்த்தான். நிலைமை சரியில்லை என்று தெரிந்ததும்.அவர்களின் பின் கையை மூறுக்கியபடியே சென்றான்.
மனதில், “அவனுகளும் ரெண்டு பேரு. நாங்களும் ரெண்டு பேரு.இது போதும்.ஒருத்தன நான் பார்த்துகிட்டாலும், இன்னொருத்தனே அவன் பார்த்துப்பான்.யாரை அடிக்கலாம் முதல்ல?”
இரு கைகளையும் மடக்கித் தயாரானான் ஆன்.
மனதில் “இப்ப சரியான நேரம் அடிக்க”
முன் சென்றவர்கள் நின்றனர்.
ஆனும் நின்றான்.
வீரமான பார்வை மங்க ஆரம்பித்தது.
யங் மட்டும் திரும்பி, “ஜங்ஆனா! இவங்க உன்னையும் கூட வரச்சொல்லுறாங்கடா”
மற்ற இருவரும் திரும்பி பார்க்க. அழுகை முகமாய் மாறியிருந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு.
“மொத்தம் இவ்வளவு தானா? எங்களுக்கு பத்தாதே! இருந்தா குடுத்திடுங்க. நானா கண்டுபிடிச்சா 10 வானுக்கு பத்து அடி” ஒருவன் சொல்ல.இல்லை என்றனர்.
“சரி போங்க”
இருவரும் கடந்து செல்ல இன்னொருவன், “டேய்!! நில்லுங்க”
நின்றனர்.
“உங்க ஷூ சைஸ் என்ன”
“260” யங்.
அவன் சிரிக்க.ஆனும் யங்கும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தத்தம் ஷீக்களை கழட்ட
யங்கை பார்த்த அவன், “டேய் உன்னது நீயே வச்சிக்க. ம்”
யங் தன் ஷூவைப் பார்த்தான். ஒட்டுப்போட்டிருந்தது.
[தெரு திண்ணை]
மாலை நேரம் பெரிய மீன் மிட்டாயுடன் ஜின்ஜுவும், மூன்று அம்மாக்களும் அமர்ந்திருக்க. நோஓள் வெளியே வந்தான்.
“என்னப்பா? அப்பாவ கூட்டிட்டு வர போறியா?” ல்வா அம்மா.
“ஆமா” என்று கடந்து சென்றான்.
“அம்மா நீங்க எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா?” பள்ளியிலிருந்து வந்துக்கொண்டிருந்த சன்வூ.
ஜின்ஜுவை தூக்கிக்கொண்டு அம்மாக்களின் அருகில் அமர்ந்தான்.
“ஜங்ஆன் வரல?” மீரான் அம்மா.
“தொங்யங்கூட வெளியே போயிருக்கான். வந்திடுவான் அஜும்மா” சன்வூ.
“இன்னிக்கு உனக்கு ரேங்க் கார்ட் குடுத்தாங்கலா?” சன்யங் அம்மா.
“ஆமாம்மா!” சன்வூ.
“என்ன பரிட்சை நடந்திச்சா?” மீரான்.
“ஆமாங்க அஜும்மா.போனா வாரம்” சன்வூ.
“பாத்தியா! மீரானா உனக்கு தெரியாது போல?” சன்யங்.தன் பிளையிடம் திரும்பி, “இந்த தடவை மார்க் குறைஞ்சிடும்னு சொன்னல்ல,அந்த கணக்காலே”
தலையசைத்தான்.
“அப்போ இந்த தடவை  யாரு முதல் ரேங்க்?” ல்வா.
“இந்த தடவை யா-....” பதில் சொல்லும் முன்.
“இது என்ன காயம் தாடையில பேண்டேய்டு போட்டிருக்க.யார் கூடயாவது சண்டை போட்டியா?” பதற்றத்துடன் சன்யங்.
“இல்லையே,சும்மா கீரிக்கிட்டேன்மா அவ்வளவுதான். நான் முதல்ல வீட்டுக்கு போறேன்” தயக்கத்துடன் சன்வூ ஜின்ஜுவுடன் அங்கிருந்து சென்றான்.
கவலையுடன் போகும் பிள்ளையை பார்த்தார் சன்யங்.
“சன்யங்கா இதுக்கு போய் முகத்தை இப்படி வச்சியிருக்க!” மீரான்.
“இல்லை, யாராவது இவனை அடிச்சாங்களான்னு தெரியலையே? ஒருவேலை மோசமான பசங்க கூட எதனா சேர்ந்திருப்பானோ?” சன்யங்.
“என்னப்பா இது, சின்ன சிராய்ப்புக்கு போய்! சன்வூ அப்படிப்பட்டவனில்லை.பெரிய விஷயம்னா உன்கிட்ட சொல்லிருப்பானே.கவலை படாதே.” ல்வா.
“மீரானா உன் பையன் வந்துட்டான் பாரு.” ல்வா.
ஆன் ரப்பர் செருப்புடன் நடந்துவந்துக்கொண்டிருந்தான்.கூடவே யங்கும்.
இருவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல.ஆன் பார்க்காமல் உள்சென்றதை பார்த்த மீரான் அம்மாவின் முகம் வாடியது.
“பொண்ணுங்களே பரவாயில்லை! 999 வது ரேங்க எடுத்தாலும், பொண்ணுங்க தான் மேல்” ல்வா.
“என்ன உன்வீட்டு ஆளுங்க யாரையும் காணும் ல்வா?” சன்யங்.
[தெரு மளிகைக்கடை]
நோஓள் வோர்ல்ட் கப் ஐஸ்கீரிமை சாப்பிட்டுக்கொண்டிருக்க,அருகில் அமர்ந்திருந்தார் தொங்இல் அப்பா.
“சீக்கிரமா சப்பிடுடா, உன் அம்மா காத்துகிட்டு இருப்பாங்க” அப்பா.
அருகில் நிழலாடியது. இருவரும் நிமிர்ந்தனர்.
தொக்சொன் நின்றிருந்தாள்.
“ஓஹோ...இதுக்கு தான் அப்பாவ கூட்டி வரேன்னு ஓடுவியா தினமும்? நீ மட்டும் தான் சாப்பிடுவியா? எனக்கும் வேணும்!” சொன்.
......
சொனின் கையில் பேமிலி பேக் ஐஸ்கிரீம் திணிக்கப்பட்டது.
“அம்மா, அக்காகூட சேர்ந்து சாப்பிடலாம்ன்னா.வா பசிக்கிது போலாம்” அப்பா.
 “அப்பா! அஜும்மாங்க எல்லாம் தெருவில தான் உட்கார்ந்துட்டு இருக்காங்க” நோஓள்.
அப்போ ராத்திரி சாப்பிடலாம்.மீண்டும் அமர்ந்தனர்.
முறைத்தாள் சொன்
[சன்வூவின் வீடு]
சில்லென்ற தண்ணீரை குடித்த சன்யங்,பல் வலியால் துடித்தார்.
இதை கண்ட சன்வூ, “ டாக்டர்கிட்ட தான் போயேன்ம்மா, பணம் எவ்வளவாகப்போகுது?”
“அம்மாக்கிட்ட காசிருக்குப்பா. அடுத்தவாரம் போறேன்.ஆனா நீ சொல்லப்போறதில்லையா, இந்த காயம் எப்படியாச்சுன்னு?” அம்மா.
“ஒன்னுமில்லைன்னு சொல்லுறேன்ல.கவலைப்படாதேம்மா.நான் ஆன் வீட்டுக்கு போய்ட்டுவரேன்” சென்றான்.
அம்மா பெருமூச்சுவிட்டார்.
 .......................
ஆன் வீட்டுநாய்க்கு உணவு வைக்க கிழே வர.
“யம்மா!! ஏய் பேய்மாறி நிக்கற? பயந்திட்டேன்”
கையில் மடகாஸ்கர் போர்டுடன் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்தாள்.
“ஏன்? நீ யாரையும் ஹான்புக்ல (கொரியன் பாரம்பரிய உடை) பார்த்ததில்லையா?” சொன்.
“போட்டுக்க போட்டுக்க” ஆன். திரும்பிச்சென்றபோது.
“எங்க ஸ்கூல்லே ட்ரஸை மாத்திட்டாங்க.நான் ஹான்புக்ல எப்படி இருக்கேன்? நல்லா இருக்கேன்ல?” சொன்.
“அப்படி ஒரு நினைப்பே வரக்கூடாது உனக்கு.சரியா?” ஆன் உள்ளே சென்றான்.
அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.
வெளிகதவு திறந்தது.
“அய்யோ! அம்மா! பயந்துட்டேன்! என்னது இது? ட்ரஸை ஹான்புகா மாத்திட்டாங்களா” சன்வூ.
“ம்..அழகா இல்லை?” சொன்.
“கண்டிப்பாஆஆ” சன்வூ சொன்னவுடன் ஆனின் வீட்டில் நுழைந்தான்.
மீண்டும் கதவு திறந்தது.இம்முறை யங் மிரட்டிவிட்டு உள்சென்றான்.
[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 6 நாட்களுக்கு முன்]
ஸ்டேடியத்தில் ஒலிம்பிக்கிற்கு பயிற்சிகள் முன்முரமாய் நடந்துக்கொண்டிருந்தது.வெயில் மாணவர்களின் ஊட்டசத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது.அதில் சொனும் அடக்கம்.
தெரு திண்ணையில் ஊருகாய் தயாரித்துக்கொண்டு கதையடித்துக்கொண்டிருந்த அஜும்மாக்கள்.
சன்வூ தாயினருகில் அமர்ந்து காலழுத்த ஆரம்பித்தான்.சன்யங்கின் பார்வை தாடை காயத்தின் மீதே இருந்தது.வழக்கம் போல் ஆன் அமைதியாய் உள் சென்றான்.

[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 5 நாட்களுக்கு முன்]
ஸ்டேடியத்தில் புலி வேஷம் போட்டிருந்தவன் மயக்கமடைந்து விழுந்திருந்தான்.அவனை ஒரு பெண் , “ஒப்பாஆ...” பின் தொடர்ந்தாள்.

[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 4 நாட்களுக்கு முன்]
ஒலிம்பிக் ஸ்டேடியத்திலிருந்து வீட்டிற்கு போன் செய்தாள், “அம்மா! இங்க சூப்பரா இருக்கும்மா!”.
தெரு திண்ணையில் கொழுக்கட்டையை தயார் செய்துக்கொண்டிருந்தனர் அம்மாக்கள்.
“சன்வூ எதுவும் வம்புல மாட்டியிருக்கமாட்டான்ல” சன்யங் வருத்தத்துடன்.
“வளந்த பிள்ளைய பத்தி ஏன் கவலை படற? விடு.” மீரான்.
“இது போதும்ன்னு நினைக்கிறேன். மூணு குடும்பத்திற்கு சரியாப்போகும்ல?” ல்வா நான்கு பெரிய தட்டில் அடுக்கப்பட்ட கொழுக்கட்டைகளை பார்த்து.
“சன்வூவோட அப்பாவுக்கு சாப்டுட்டு தொண்டை அடைக்கப்போகுது. ஹா ஹா ! அவருக்கு பிடிக்கும்.அப்பறம் மீரானா எனக்கு ஒரு 30,000 வான் கொடுங்களேன்.அடுத்த மாசம் திருப்பிடறேன்.” சன்யங்.
“சரி” மீரான்.
“ஆனுக்கு புது ஷூவை வாங்கிக்கொடுக்கறது?” சன்யங்.
மீரான் புரியாமல் பார்க்க, சன்யங் தொடர்ந்தார், “உனக்கு தெரியாதா? ஷூ திருடுபோய்டுச்சாமே! அடி எதுவும் வாங்கலே ஆனா பணம் தான் போச்சாம்.சன்வூ சொன்னான்”
செய்வதரியாது திகைத்தார் மீரான்.
“நூறு வயசு! உன் பிள்ளை வரான்” சன்யங்.
பழைய கிழிந்த ஷூ கால்களுடன் ஆன் வீட்டிற்குள் சென்றதை பார்த்து வருந்தினார்.
அன்று இரவு மீரான் டைனிங் டேபிளில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். பிள்ளைகள் சாப்பாட்டிற்கு அமர்ந்தனர்.
“சாப்பாடு இல்லையா” பொங்.
“அப்பா வெளியே சிக்கன் வாங்கிட்டு வரேன்னு சொன்னாரு.” மீரான்.
“யெஸ்!!!” சந்தோஷப்பட்டான்.டைரக்டரியை புரட்டினான்.
“அண்ணா ‘சிக்கன்’ன்ற பேர்ல எல்லாம் யாரும் இருக்கமாட்டாங்க” சலித்துக்கொண்டான்.
வாசற்கதவு தட்டப்பட்டது.
பொங் உடனே கதவை திறக்கச்சென்றான்.
“ஜங்ஆனா” அம்மா.
“சொல்லுங்க” ஆன்.
“எதனா சொல்லனுமா எங்கிட்ட”
“இல்லையே”
இருவரும் கை கட்டியபடி அமர்ந்திருக்க.அப்பா உள்ளே நுழைந்தார்.
வந்தவுடன் ஒரு கையை வானத்தை நோக்கி நீட்டியபடி, “ ஐய்கோ! பிரேசிடண்ட் ரா!” நகைச்சுவையுடன்.
மௌனம்..................
“’பிரேசிடண்ட் கிம்’னு சொல்லனும் மீரானா.” அப்பா.
“விவாகரத்து வேணுமா?”
“.............................”
     கிழே போர்டுடன் பயிற்சியில் இருந்தாள் சொன்.அங்கு சிக்கனிருக்கும் பையுடன் சங்யன் அப்பா வந்தார்.
“ஐய்கோ! பிரேசிடண்ட் சொங்!” உற்சாகமாக.
“ஐய்கோ! பிரேசிடண்ட் கிம்!” சொனு சிரிப்புடன்.இருவரும் தங்கள் பாணியில் ஒரு வரவேற்ப்பு நடனம் ஆடினார்கள். பின் யாருக்கும் கொடுக்காமல் அவளை மட்டும் சாப்பிட அறிவுரைக்கூறிவிட்டு சென்றார்.
சொனின் வீடு.
ஒலிம்பிக் தீபம் வந்து சேர்ந்த செய்தி டிவியில் ஒளிபரப்பானது.
அம்மா சிக்கனை பிரித்து பங்கிட்டார். ஒரு கால் போராவிற்கு, இன்னொன்ரு நோஓளுக்கு,இறக்கை சொன்னிற்கு.
டிவியில் ஒரு மாணவி பேட்டிக்கொடுப்பதை பார்த்த நோஓள், “சொன் அக்கா! உன்னை பேட்டி எடுக்கலையா?”
“அவங்க என்ன லூசா? அழகான பொண்ணுகளை தான் பேட்டி எடுப்பாங்க! இவளை ஏன்?” போரா.
போராவை முறைத்தாள் சொன்.
“அப்போ! சொன் கூட டிவில வரும்ல” அப்பா.
“நான் கூட நாளைக்கு பேட்டி கொடுக்கப்போறேன்ப்பா.” சொன்.
“பொய் சொல்லாதடி” போரா.
“உண்மையா தான்!” சொன்
“தங்கச்சிய நம்பும்மா” அப்பா.
“அந்த லூசு பொய் சொல்லுறாப்பா” போரா.
“அமைதியா இரு போரா” அப்பா.
“ஏன் என்னையே அமைதி இருக்கச்சொல்லுறீங்க?” போரா.
“நீ தான்டி அதுக்கு காரணமே” சொன்.
“என்னது ‘டி’யா?” அடுத்த நொடி கொத்தாக சொனின் தலைமுடியை பற்றினாள்.
“ஆஆ.....அம்மா அம்மா” அலறினாள்
அம்மா அவர்களை பிரிக்கமுற்பட
அப்பாவும் தம்பியும் திரும்பவில்லை.
[1988 சியோல் ஒலிம்பிக்ஸ்க்கு 3 நாட்களுக்கு முன்]
[ஒலிம்பிக் ஸ்டேடியம்]
மேக்கப் போட்டுக்கொண்டிருந்த சொன்னை
“உன்னை கூப்பிடறாங்கப்பா” மாணவி ஒரித்தி கூற.எழுந்து சென்றாள்.
அங்கே...
“பயப்படாமே பேசுமா.கேட்கிற கேள்விக்கு பதில் மட்டும் சொன்னா போதும் சரியா?” தொகுப்பாளர்.
பதற்றத்துடன் தலையசைத்தாள்.
மைக்கை அருகில் கொண்டுச்சென்றார்.
“உன்னை பத்தி சொல்லும்மா”
“வணக்கம். நான் ஒலிம்பிக் போட்டியில் மடகாஸ்கருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்கெட் கேர்ள் சங்முன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சொங் தொக் சொன்” மனப்பாடமாய் கூறினாள்.
“நீங்க தான் இங்க இருபவர்களோட சின்ன வயசாமே! உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“இல்லைங்க”
சில கேள்விகளுக்கு பிறகு
“இவ்வளவு ஆர்வமா கலந்துகிட்டுடிருக்கீங்க. நீங்க அந்த விஷயத்தை கேட்டு ரொம்ப கவலைப்பட்டிருப்பீங்கலே?”
சொன்னின் முகம் மாறியது. தொடர்ந்தார்.
“நீங்க எப்ப மடகாஸ்கர் இந்த வருஷம் ஒலிம்பிக்ல கலந்துக்களைன்னு தெரிஞ்சிக்கிட்டீங்க?”
சொன்னின் கண்ணில் நீர் சுரந்தது.
“வட கொரியாவோட நட்பாலே மடகாஸ்கர் கலந்துக்களைன்னு  நேத்து தான் அறிவிப்பு வெளியாச்சி.உங்களுக்கு இப்ப தான் தெரியுது போல இருக்கே? அரை வருஷம் இதுக்கு பயிற்சி எடுத்தீங்க.கவலையா இருக்குமே?”
அழுகையை முழுங்கினாள். கண்களை துடைத்துக்கொண்டாள்.
“என்னால் இதில் கலந்துக்கொள்ள முடியவில்லையென்றாலும்.விளையாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” குரல் தழுதழுக்க சொல்லிமுடித்தாள்.
.... உள்ளே மடகாஸ்கர் போர்ட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொக்சொனின் மனதும்.
[சன்வூவின் வீடு]
மேஜை நிறைய உணவு வைக்கப்பட்டிருந்தது.
“சன்வூயா! எண்ணெய் கொஞ்சம் வாங்கிட்டு வாப்பா!.காலியாடுச்சி” அம்மா.
இரண்டு முறைக்கூப்பிட்டும் பதில் வரவில்லையென்றதும். அறைக்குச்சென்றார்.
காலியாக இருந்தது.
“அண்ணா இல்லைம்மா,சட்டை போட்டுட்டு வெளியே போய்டாரு” ஜின்ஜு
அறையை நோட்டமிட்டார்.எதையோ கவலையுடன் தேடினார். ட்ராயரில்,சட்டைப்பையில் எதுவும் சந்தேகப்படும்படி இல்லை.நின்றார்.டேபிளுக்கு அடியில் சிகரேட் பேக்கெட் ஒன்று இருக்க, அதிர்ச்சியுடன் அதை கையில் எடுத்தார்.
...
தெருவில் கவலை முகத்துடன் நடந்துவந்துக்கொண்டிருந்தாள் சொன்.
பின்னால் நோஓள் ஓடிவந்து, “அக்கா! ஏன் லேட்டு? எவ்வளவு ஏற்பாடு செஞ்சியிருக்கோம்.கையைப்பிடித்து இழுத்துச்சென்றான்.
“ஹாப்பி பர்த்டே டூ யூ...
ஹாப்பி பர்த்டே டூ யூ...
ஹாப்பி பர்த்டே டூ டியர் போரா...
ஹாப்பி பர்த்டே டூ யூ...”
பாட்டுமுடிந்து கைத்தட்டினர்.மெழுகுவர்த்தியை அணைத்தாள் போரா.
நோஓள் கேக்கை வெட்டச்செல்ல,அப்பா நிறுத்தினார்!
மூன்று மெழுகுவர்த்தியை அதிலிருந்து எடுத்தார்.பின் மெழுகுவர்த்தியை ஏற்றி சொன்னின் முன் நீட்டி, “இப்போ என் ரெண்டாவது பொண்ணுக்கு கொண்டாடுவோம்! ஒன்னு,ரெண்டு,மூணு. ஹாப்பி பர்த்டே டூ-...”
“நிறுத்துங்க! நான் தான் சொன்னேன்ல அவக்கூட சேர்ந்து பிறந்தநாளு கொண்டாடமாட்டேன்னு!” தேம்பினாள். “ஏன் ஒரு தடவைக்கூட நான் சொல்லுறதே கேட்க மாட்டேன்றீங்க?”
“அடுத்த வருஷத்தில இருந்து தனியா கொண்டாடலாம்.” அம்மா.
“போன வருஷமும்,அதுக்கு முந்தின வருஷமும் இதையே தான் சொன்னீங்க! நான் என்ன குப்பையா?”
அறையில் சொனின் அழுகை எதிரொலித்தது.
அம்மாவை பார்த்தாள்.
“எப்படி எனக்கு மட்டும் முட்டையே இருக்கமட்டேன்றது? எனக்கு முட்டை தோசை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?காராமணியையே தருவே! எனக்கு அது புடிக்கவே புடிக்காது!”
அப்பாவிடம் பார்வை திரும்பியது, “அப்பறம் ஏன் நோஓளுக்கு மட்டும் வோல்டுகப் ஐஸ்கிரீம்? அடுத்து சிக்கன்,அதை நான் சாப்பிட அஜுஷி கொடுத்தாரு!நீங்க கோழிக்காலை அவங்களுக்கு கொடுத்தீங்க!”
“தொக்சொனா” அப்பா அமைதிபடுத்த முயற்சிக்க
“ஏன் நான் தொக்சொன்? அவங்களுக்கு மட்டும் நல்ல பேரு எனக்கு மட்டும் ஏன் தொக்சொன்? ஏன்?” அழுதபடியே எழுந்துச்சென்றாள் சொன்.
அறையில் அமைதி நிலவியது. மடகாஸ்கர் விலகியதை டிவியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தனர். நால்வருக்கும் சூழ்நிலைப்புரிந்தது.
வெளியில் மனம்விட்டு அழுதுக்கொண்டிருந்தாள் சொன்.
[சன்வூவின் வீடு]
கையில் பொருளுடன் உள்நுழைந்தான் சன்வூ.
தன் அறையில் அம்மா இருப்பதை பார்த்தவன், “இங்க என்னம்மா செய்யற?”
மௌனம்....
“அம்மா ஏதாவது பிரச்சணையா?”
அமைதியாய் கையிலிருந்த பெக்கெட்டை முன் வைத்தார்.
அவன் பக்கம் திரும்பி
“என்னது இது?”
விழித்தான்...
“சிகரெட் குடிக்கிறியா நீ?”
“என்ன? நானா?” அதிர்ந்தான்.
“எப்போ இருந்து இந்த பழக்கமிருக்கு?உண்மையைச்சொல்லு”
“இல்லைம்மா. அது என்னது இல்லை.”
“இப்போ எல்லாம் என்ன செய்யறன்னே தெரியதில்லை!”
“அது என்னதில்லைன்னு சொல்லுறேன்லம்மா!”
“உனக்கு தெரியும்ல நான் உங்களை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுறேன்னு? நீ நான் சாகறதே பார்க்கனும்னு ஆசைபடறியா? மோசமான பசங்கக்கூட சேர்ந்துகிட்டு புகை புடிச்சிகிட்டு திரியற போல?” கோபத்துடன்.
“நான் எப்போ செஞ்சேன்?!!!! அது என்னதில்லைன்னு சொல்லுறேன்லம்மா”
எழுந்து அருகில் வந்தார் அம்மா.
“அப்போ இந்த காயம் எப்படி வந்திச்சி? யாருகூடன்னா சண்டை போட்டியா? இல்லை அடிச்சாங்களா? நீ உண்மைய சொல்லமாட்டேல அம்மாகிட்ட? நீ இப்ப அப்பா நம்மக்கூட இல்லைன்னு தானே இப்படி எல்லாம் நடந்துக்கிற?அம்மாவை பத்தி நினைச்சேப்பாக்கல நீ? ” கோபத்திலும் வருத்தத்திலும் வெடித்தார்.
சன்வூவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“அம்மா!”
சற்று தயங்கி
“அம்மா, இந்த காயம்..... நானே சவரம் செய்ய முயற்சி பன்னப்ப இப்படி ஆய்டுச்சிம்மா”
அம்மாவிற்கு கால் தளர்ந்தது.கோபம் துயரமாய் மாறியது.மெதுவாய் முகத்தை மூடி அழ ஆரம்பித்தார்.
“ஆ...அம்மா” ஆறுதலாய் அணைத்துக்கொண்டான். “ஏன்மா? என் ப்ரெண்டுகளுக்குகூட முதல் தடவை இப்படி தான் ஆச்சாம்மா.அப்பா இல்லாததாலே எல்லாம் இல்லைம்மா”
இன்னும் அழுகை அதிகமானது.அவன் கண்களும் கலங்கின ஆனால் அழவில்லை, அம்மாவை ஆறுதல் படுத்த முயற்சித்தான்.
“நான் கத்தினது மன்னிச்சிடும்மா! அழுவாதிங்க.”
சிறிது நேரம் கழித்து...
செய்த உணவெல்லாம் ஒரு புகைப்படத்திற்கு முன் வைத்து படைக்கப்பட்டிருந்தது.சன்வூ ஜின்ஜு தங்கள் தந்தைக்கு மரியாதையை செலுத்தினர்.அம்மா ஓரமாய் கண்ணீர் விட்டபடி இருந்தார்.
[17,செப்டம்பர்,1988,24வது சியோல் ஒலிம்பிக்ஸ்,தென் கொரியா]
அனைவரும் தத்தம் வீடுகளில் டிவியின் முன் அமர்ந்திருந்தனர். ஒலிம்பிக் துவக்கத்தை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
தொக்சொனின் வீடு
தின்பண்டங்களுடன் மூவரும் அமர்ந்தனர்.
“என்னங்க, பட்டபகல்லே பீரா?” அம்மா.
“நம்ம 2வது பொண்ணு இண்டர்நேஷ்னல் டிவியில வரப்போறா இது கூட இல்லைன்னா எப்படி” அப்பா.
ஆனின் வீடு
டேப் போட்டு நடப்பை ரெக்கார்ட் செய்ய தயாராய் வைத்தார் அப்பா.
“ஆன்! எந்த நாட்டுக்காக அவ பிக்கெட் கேர்ளா இருக்கப்போறா?”
“அது.....நீங்களே பார்ப்பீங்க!” ஆன்.
சலிப்புடன் தன் டீயில் கவனம் செலுத்தினார்.
சன்வூவின் வீடு
“தொக்சொன்னிற்கு அதிர்ஷ்டம் தான். ஒரு பொண்ணு சரியா செய்யலைன்னு தூக்கிட்டு.நல்லா முயற்சி செஞ்ச இவளை எடுத்துக்கிட்டாங்க” அம்மா.
“ஆமாம்மா. இந்த முயற்சி அவ படிப்பில காட்டினா முதல் ரேங்க் வருவா!”
“எந்த நாடுன்னு சொன்னா?”அம்மா
தொக்சொனின் வீடு
“உகாண்டாப்பா! கடைசியா தான் வரும்.” நோஓள்
“போரா எங்க?” அப்பா
“போரா சீக்கிரம் வா ஆரம்பிக்கப்போகுது” அம்மா
“நான் பார்க்கல” போரா அறையிலிருந்து.
“அவ கிடக்கிறா விடு. லூசு” அப்பா.
உள்ளே கதவின் ஓட்டைவழியே பார்த்துக்கொண்டிருந்தாள் போரா.
அரங்கத்தில் ஒவ்வொரு நாட்டு வீரர் வீராங்கனைகள் நுழைந்துக்கொண்டிருந்தனர்.
உகாண்டா நாட்டுப்பலகையுடன் தொக்சொன் தோன்ற
“அதோ..அதோ .. அக்கா அக்கா”
“ஆங்.....என் பொண்ணு.....”உண்ர்ச்சிவசப்பட்டார்.
எல்லார் வீட்டிலும் குதுகலம் பரவியது.
அவரவர் பாணியில்  சந்தோஷத்தை கொண்டாட ஜங்ஆன் கூட புன்னகைத்தான்.
தொலைபேசியில் அனைவரும் இதைப்பற்றி விசாரித்தனர்.
ஆனின் வீட்டில் மெதுவாக அம்மா ஆனிடம் பேச்சுக்கொடுத்தார்.மீரான் கேட்டக்கேள்விக்கு ஜங்பொங் பதில்கூற. அம்மாவின் முயற்சி தோல்வியடைந்தது.ஆனும் உள்ளே சென்றுவிட்டான்.
சில நிமிடங்கள் கழித்து ஆனின் அறையில் அம்மா நுழைந்தார்.
கட்டிலில் அமர்ந்தபடி, “என்ன செய்யற?”
“படிக்கிறேன்.ஏன்?” அமைதியாய்.
“ஒன்னுமில்லை...” கொஞ்சம் தயங்கி “எங்கிட்ட எதனா சொல்லனுமா?”
“எதுவுமில்லையே!”
“பரிட்சை எழுதினீங்களாமே?”
“ஆமா”
“நல்லா எழுதினியா?”
“ம்”
அம்மாவை பார்த்துவிட்டு
“நான் முதல் ரேங்க்”
“ஏன் அம்மாகிட்ட சொல்லலே?”
“அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே!”
“அம்மாவுக்கு எல்லா தெரியனும்னு ஆசையா இருக்கே.இந்த மாதிரியான விஷயமெல்லாம் சொல்லலாம்லே? சன்வூ அம்மாவ பார்த்தா எவ்வளவு பொறாமையா இருக்கு தெரியுமா?”
மீரானையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“எல்லாமே சொல்லனும்னு அவசியமில்லை.எது உனக்கு தோணுதோ அதை சொல்லு போதும்.ஒவ்வொரு தடவையும் மத்த அம்மாங்க முன்னாடி சங்கடமா இருக்குப்பா. சரியா?”
தலையசைத்தான்.
“பதில் சொல்லுப்பா”
“சரிம்மா..” சின்ன சிரிப்புடன்.
“நல்லா படி” சொல்லிவிட்டு எழுந்தார்.வாசல் வரை போனவர். பின்பக்கமாய் ஆனை 2 நொடிகள் அணைத்தார்.மீண்டும் கதவருகே போகும் போது.
“அம்மா!”
திரும்பினார்.
“எனக்கு புது ஷூ வங்கித்தருவீங்களா? நான் தொலைச்சிட்டேன்.” தயங்கியபடி.
அம்மாவின் உதட்டில் புன்னகை பரவியது.
சில நொடிகள் கழித்து...
மீரான் அம்மா, “ஆன், உனக்கு ஷூ வாங்க போலாமா?”
“பணம் மட்டும் கொடும்மா. நானே வாங்கிக்கிறேன்”
“சரி”
..............
சன்வூவின் அம்மா கண்டுபிடித்த சிகரெட் பாக்கெட் யாருடையதென்பதை அலசிக்கொண்டிருந்தார்.
“சன்வூ, ஜங்ஆனா இருக்குமோ?”
“இருக்காதும்மா, எனக்கே இது எப்படி வந்ததுன்னு தெரியல!”
...................
[8 நாட்களுக்கு முன்பு]
ஜின்ஜு தெரு திண்ணையில் மேலிருந்த மீரானின் மேலாடை போட்டுக்கொண்டு சன்வூவின் அறையில் குதித்து விளையாடும் போது, அதிலிருந்து டேபிளுக்கு அடியில் தவறி விழுந்திருந்தது.
........................
[தற்போது]
அன்று சன்யங் அம்மா தன் தம்பியை அழைத்திருந்தார்.
“அக்கா சவரம் செய்யற பொருள் எல்லாம் இருக்கா?”
“இருக்குடா, எல்லாத்தையும் ஒழுங்கா சொல்லிக்கொடு. சரியா?”
“சரிக்கா.”

......
அன்று இரவு வெளியே தொக்சொன்னிற்காக காத்திருந்தார் அப்பா.
அவள் வருவதை பார்த்து புன்னகைத்தார்.பின் இருவரும் மளிகைக்கடை திண்ணையில் அமர்ந்தனர்.
சொன் தனக்கு உகாண்டா வீரர்கள் கொடுத்த பரிசுகளை காட்டினாள்.அதில் இறந்து போன இரண்டு புறாக்களும் அடங்கும்- பாவப்பட்டு புதைக்க எடுத்து வந்திருந்தாள்.
பின் அப்பா சொன்னை காத்திருக்க சொல்லிவிட்டு,கடைக்குள் இருந்து கேக் எடுத்து வந்தார்.
“என் தொக்சொனுக்கு,பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இங்க பாரு அதுக்குள்ள 18 வர்த்திங்க.அதுக்குள்ள வளர்ந்திட்ட ஹா ஹா ” அப்பா.
“அப்பாஅம்மாவே மன்னிச்சிடுடா.எங்களுக்கு தெரியாதுடா.உன் அக்கா பிறந்தப்போ எப்படி படிக்கவெக்கறதுன்னு கவலைப்பட்டோம்.நீ பிறந்தப்போ எப்படி வளர்க்கப்போறோம்னு கவலைப்பட்டோம். தம்பி பிறந்தப்போ நல்ல மனுசனா எப்படி ஆளாக்கப்போறோம்னு கவலைப்பட்டோம்.அப்பா பிறக்கும்போதே அப்பாவா பிறக்களையே.அப்பாவா எனக்கு முதல் தடவை தானே.இந்த ஒரு தடவை மன்னிச்சிடு”
நொடிகள் எடுத்துக்கொண்டு...
“என் பொண்ணு நல்லபடியா வளர்ந்திருக்கே. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா எப்படி இருக்கப்போறேனோ?” திருப்தியாய் கூறினார்.
சொன்னிற்கு கண் கலங்கியது.
“நான் கல்யாணம் செஞ்சிக்கமாட்டேன்” சொன்.
“அப்படி சொல்லாதே. வா கேக் வெட்டு”
மீண்டும் அப்பா வாழ்த்து சொன்னார்.
பின் கைக்கோர்த்தபடி இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
[ஒரு மாதம் கழித்து]
நடு இரவில் மூச்சுவிட முடியாமல் விழித்தார் தொங்இல் அப்பா.கார்பன் மொனாக்ஸைட் (அடுப்புக்கரியிலிருந்து) வாயு பரவியிருப்பதை உணர்ந்தவர் ல்வாவை எழுப்பி மயங்கியிருந்த போராவையும் நோஓளையும் வெளியே தூக்கிச்சென்றனர்.
“அப்பாடா வந்துட்டோம்.இனி பிரச்சனையில்லை.” அப்பா.
இருவரும் ஏதோ குறைவதை உணர்ந்தவர்கள்.அதிர்ந்தனர்.
உள்ளே தொக்சொன் தானாகவே தன் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள தட்டுத்தடுமாறி வெளியே வந்தாள்.

[நவம்பர் 2015]
தொக்சொன் பேட்டியில் இருந்தாள்.
“கேள்வி திருப்பிச்சொல்லுங்க.”
............
“ஓ...எப்போ நாங்க சந்திச்சோம்னு தானே? சாரிங்க நான் சின்ன வயசுல கார்பன் மொனாக்ஸைட் நிறைய சுவாச்சித்தாலே மறந்துட்டேன்.எனக்கு அவரை 20 வருஷமா தெரியும்.ஒரே தெருவில தான் வளந்தோம்.ஆனா கனவுலக்கூட அவரை கல்யாணப்பன்னுவேன்னு நினைச்சிக்கூடப்பார்க்கலே.ஹா ஹா.அவருக்கு அதிர்ஷ்டம் என்னை மாதிரி அழகான மொண்ணு மனைவியா கிடைக்க!”.

                                தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக