சனி, 23 செப்டம்பர், 2017

ஹலோ கோஸ்ட் (கொரிய திரைப்படம்)

                             ஹலோ கோஸ்ட்(hello ghost)
                                 பகுதி-2

கண் விழித்தான்.சுற்றி பார்த்தான்.
அருகில் மருத்துவர் நின்றிருந்தார்,கூடவே நர்ஸ்.
“என்ன நல்லா தூங்கனீங்களா?”
தரையில் படுத்திருந்தவன் எழுந்து நின்றான்..
மருத்துவர் தொடர்ந்தார், “அந்த கல்லு மாறி இருக்கிற பெட்டோட, தரையிலே படுக்க வசதியா மெத்துன்னு இருக்கு போல!”
அருகில் இருந்த மெத்தையில் அமர்ந்தவன், “கண்டிப்பா இந்த பெட்டுதான் மெத்துன்னு இருக்கு.”, என்று திரும்பியவன் அடுத்த படுக்கையின் மேல் ஒரு சிறுவன் குதித்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.
“அங்க ஒரு பையன்.....” என பாதியில் நிறுத்தி அங்கு பார்க்க.
அங்கு இருந்த மருத்துவ குழு அவனை கேள்வியாய் பார்க்க, பேச்சை பாதியிலேயே நிறுத்தினான்.
மீண்டும் படுக்கையை பார்த்தான்.அங்கு சிறுவன்,அஜூமா,அஜூஷி,தாத்தா என நால்வரும் அமர்ந்திருக்க சாகாமலே நரகத்தில் தள்ளப்பட்டதாய் உணர்ந்தான். 
சில நாட்களுக்கு பிறகு சங்மேன் வீட்டுக்கு அனுப்பபட்டான்.
பேருந்தில் பயணம்.கடைசி நீள இருக்கை.
பெரிய ஆவிகள் அருகில் அமர்ந்திருக்க, சிறியவன் அடுத்த சீட்டில் குதித்துக்கொண்டிருந்தான்.
புகை அஜூஷியிடம் திரும்பியவன், “ நீங்க எல்லாம் இப்படி தான் தொடர்ந்து வருவீங்களா? எப்பவுமே!”
அமைதியாய் அவனை பார்த்தார் அஜூஷி.
அடுத்த முனையின் அமர்ந்திருந்த சுமாரான பெண் பயணி தன்னிடம் பேசுவதாய் நினைத்து, “ ஹலோ சார்! உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா என்ன?” சொல்லி சிரித்தாள்.
இவன் வெறுப்பாய் திரும்பிக்கொண்டான். அவள் தொடர்ந்தாள், “சார் வெட்கமெல்லாம் படாதீங்க.”
அவள் பேசுவதை கவனிக்காமலிருந்தான். முன்னிருக்கையின் பின் பகுதியிலுருந்த சாமியாரின் விளம்பரத்தை பார்த்தான்.
அடுத்த நிறுத்தம், சாமியாரின் முன்.
பரம்பரிய உடையணிந்திருந்த அவர் தன் முன்னிருக்கும் தட்டில் அரிசிமணிகளை தூவி, அதிலிருக்கும் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு மென்றார்.
யோசித்தவராய் சங்மேனை பார்த்து, “கடவுள் கொடுத்த வரம்”
“என்ன??”
“நீ இன்னும் கடவுளை பார்க்காம இருக்கறது அதிர்ஷ்டம்! உயிர் பிழைச்சி இப்போ ஆவிகளை பார்க்கிற அதிர்ஷ்டம் வந்திருக்கு”
“அதனாலேயே சாகனும்னு தோணுது”
சங்மேனை முறைத்தவர்.
“நீ அப்படியேல்லாம் சாக முடியாது.அவங்களுக்கு அதைபத்தி கவலையில்லை”
“அதெப்படிங்க கவலையில்லை? அவங்க என் உடம்பை யூஸ் செஞ்சிக்க போறாங்களாமே!”
“அவங்களுக்கு ஒரு மனிஷ உடம்பு தேவைப்படுது. சாக ஆசைப்பட்ட நீ கிடைச்சிட்டே.அவங்க அவ்வளவு லேசா உன்னைவிட்டு போக மாட்டாங்க, சாகவும் விடமாட்டாங்க.”
சோர்வுடன் வெளியே சென்றான். அவன் போவதை பார்த்துக்கொண்டிருந்த சாமியார் , “பொறுமையா இரு.” புரிந்தவராய்.
நால்வரும் இவன் தோள்மேல் பயனம் செய்ய தாங்கியபடியே நடந்தான்.
அப்பார்ட்மெண்ட் வீட்டுவாசலில் அடுத்தவீட்டு அஜூமாக்கள் சங்மேன் வாசலில் கொட்டிக்கிடக்கும் குப்பைமேட்டை பார்த்து திட்டிக்கொண்டிருக்க ஒரு காலை தேக்கியபடி சங்மேன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
சோர்வுடன் இருந்த அவனிடம் ஒரு அஜூமா, “ஏப்பா நீ சின்னவன் தானே? ஏன் இப்படி உன் வீட்டு வாசலை சுத்தப்படுத்தாமே வச்சிருக்கே?”
அவன், “ அஜூமா! ஒருத்தன் தனியா வாழறதாலே உங்களுக்கு அவ்வள்வு கஷ்டமா?”
“ஆமா, சீக்கரமா தான் சாவேன்” என்று கூற.
“சரி! இன்னும் ஒரு தடவை முயற்சி செய்யறேன்”
உள்ளே வந்து கதவை மூடியவனின் முதுகில் இருந்து ஒவ்வொருவராய் இறங்கினர்.
நால்வரும் வீட்டை சுற்றிபார்த்தனர்.
பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடியது, “முதல் தடவையா என் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க.ஆனா அவங்க மனிஷங்களா இருந்தா நல்லா இருக்கும்”
ஃப்ரிஜ்ஜில் தலைவிட்டு பார்த்த தாத்தா, “பிராந்தி,வைன்,சோஜூ எதுவும் இல்லையா?”
மனதில், “ஆரோக்கியமான வாழ்க்கை வாழறவன் நான், ஆனா இந்த தாத்தா தண்ணியில்லாம வாழவே முடியாது”
அன்றிலிருந்து சங்மேன் உடம்பை முழுமையாய் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
தாத்தா இவன் உடம்பை உபோயோகித்து பாட்டில் பாட்டிலாய் காலிசெய்தார்.ஜன்னல் அருகில் நின்றுக்கொண்டு சிறுநீர் கழித்தார், அதனை பார்த்து அதட்டிய பக்கத்து வீட்டு அஜூமாவிடம் வாயை பிதுக்கி பழிப்பு காட்டினார்.
சிறுவன் தனக்கு பிடித்த நொறுக்குத்தீனிகளை சங்மேன் மூலமாக அடித்து நொறுக்கினான்.
புகை அஜூஷி சிகரெட்டை ஊதித்தள்ளினார்.
அழுகை அஜூமாவின் அழுகையால் அசோசியேஷன் மீட்டிங்கில் சங்மேனின் சிறுநீர் விவகாரம் மன்னிக்கப்பட்டது.
சில நாட்கள் கடந்தது.
இரவு.
சங்மேன் இணையத்தில் காருக்குள் மூச்சைடைத்து தற்கொலை செய்ய தேவையான குறிப்புக்களை தேடிக்கொண்டிருந்தான். அருகில் நிழலாடியது.
திரும்பினான். அருகில் தாத்தாவும், அஜூஷியும் நின்று முறைத்தனர். நிலைமை புரிந்தவன்.
“பாத்ரூம் போகனும்” என்று நழுவினான்.
அடுத்த நாள் காலை...
டைனிங் டேபிள் அருகில் படுத்திருந்த சங்மேன் விழித்தான். மிகவும் அசதியாய் இருந்தது. கன்னங்கள் சிவந்திருந்தது,உதட்டோரம் எச்சில் வழிந்து காய்ந்து கோடு போட்டிருந்தது. எழ முடியவில்லை. திரும்பி ஹாலை பார்த்தான். அறை வெறுச்சோடி இருக்க அங்கு காலி சோஜூ பாட்டில்களின் குவியல்கள். யாரும் இல்லாததை நினைத்து சிரித்தான். அடுத்த நொடி வயறு கலக்க கழிவறைக்கு ஓடினான். சென்றமர்ந்த அடுத்த கணம் வயறு புரட்ட வாந்தியும் எடுத்தான்.
சோர்வுடன் வயறை பிடித்துக்கொண்டு வெளியே வர, ஹாலில் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஓடிக்கொண்டிருந்த ஆவி படத்தை பயந்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர் நால்வராவியும்.
இன்னும் இவர்கள் இங்கிருப்பதைக்கண்ட சங்மேனுக்கு கோபம் தலைக்கேறியது.
“என்ன செய்யறீங்க நீங்க? நான் ஆரோக்கியமா வாழனும்னு நினைக்கிற ஆளு தெரியுமா? ம்......வாழறவங்களுக்கு ஆரோக்கியம் எவ்வள்வு முக்கியம் தெரியுமா? நீங்க உயிரோடக்கூட இல்லை. ஏன் என் உயிரே வாங்கறீங்க? ச்சே...”
அதுவரை சங்மேனை கண்டுக்கொள்ளாமல் படத்திற்கு பயந்துக்கொண்டிருந்தவர்கள் மெதுவாக இவன் பக்கம் பார்த்து முறைத்தனர்.
சங்மேன் அப்படியே பம்மியபடியே தன் அறைக்கு சென்றான்.
அன்று இரவு..
தூங்கிக்கொண்டிருந்த சங்மேனுக்கு குளுரியது. போர்வையை இழுத்துப்போர்த்தியும் முடியாமல் ஹீட்டரின் அளவை ஏற்றிவிட்டுச்சென்று படுத்தான்.
சிறிது நேரத்தில் அவன் ஹீட்டரின் முன் நின்றுக்கொண்டிருந்தான், அது அதிகபட்ச அளவை காட்டிக்கொண்டிருக்க, வீடு முழுவதும் பனி உறைந்துபோயிருந்தது. நடுக்கியபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.கனவாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஆள்காட்டிவிரலை சுவட்ரில் வைக்க சதை பீய்த்துக்கொண்டு இரத்தம் வழிந்தது. அலறினான்.........
..............................................................................................................
“அனுபவி” என்றார் சாமியார்.
தொடர்ந்தார், “அவங்க கோவத்தோட வெளிபாடு தான் அது. சாதாரனம்”
“சாதாரனம் ஆசாதாரனம் இருக்கட்டுங்க சாமி. அவங்களே தொறத்த வழி இருக்கா.பரிகாரம் இருந்தா நான் செய்யறேன்.” சொன்ன சங்மேனின் விரலில் சிறிய கட்டு.
“முடியாது”
“ஏன் முடியாது?”
“பரிகாரம் சொல்லுறது ஹிசி.ஆனா செய்யறது கஷ்டம்பா”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. அதுங்களை எப்படியாவது ஏங்கிட இருந்து பிரிக்கனும் அவ்வளவுதான்”
“அப்போ ஒரே வழிதான் இருக்கு. அவங்களுக்கு என்ன வேனுமோ அதை கேட்டு செய்”
“என்ன? நான் ஏன் செய்யனும்? நானா அவங்களை கூப்பிடேன்.அவங்க என்னை கண்டுக்கிறதே இல்லை.அவங்ககிட்ட என்னன்னு கேட்க? முடியாது நிச்சயமா முடியாது.”
....................................................................................................
சங்மேன் டிவி பார்த்துக்கொண்டிருந்த நால்வரின் முன்னால் சென்றமர்ந்தான்.
குரலில் சிறிய நடுக்கத்துடன், “ ரொம்ப கஷ்டமா இருக்குங்க, ஆரோக்கியமான வாழ்க்கையில்லாமே நாலு பேரையும் கூட சுமக்கிறது.....மு..முடியிலைங்க”
அவர்கள் அவனை பார்க்காமல் டிவியையே பார்த்தனர்.
“சரி. ஒரு சமரசத்துக்கு வரலாம்.ம்.. உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லுங்க, என் உடம்பை யூஸ் செஞ்சி நிறைவேத்திக்கங்க.எல்லாம்”
தாத்தாவும்,பையனும் மட்டும் ஆர்வம் காட்டினர்.
“என்னங்க சொல்லுறீங்க?” சங்மேன் தாத்தாவை பார்த்து.
“ஆசையை நிறைவேத்தறேன்னு சொல்லுறே. என் ஆசை சின்னது, ஒரு கேமரா வேணும் அவ்வளவுதான்” தாத்தா ஆர்வமாய்.
“நான் சொல்லுறதையும் கேளு. என்ன?” பையன்.
“ஏய் பெரியவங்க பேசறப்ப என்ன குறுக்காலே பேசறே.” என்று தாத்தா அதட்ட.
“முன்னாடியே சொல்லிவைக்கனும். அப்பறம் முடியாமே போச்சின்னா.” பையன்.

“ஏங்க. இருங்க.ஒவ்வொருத்தர் ஆசையா நிறைவேத்தலாம்.நிதானமாய் இருங்க.ஆனா...அப்பறமா என்னை விட்டுட்டு போய்டனும்.சரியா? முடியலைங்க” கெஞ்சும் குரலில்.

ஹலோ கோஸ்ட் (கொரிய திரைப்படம்)

                      ஹலோ கோஸ்ட்(HELLO GHOST)
                               பகுதி-1
அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிக்க.அதனருகே ஒரு இளைஞன் கை நிறைய தூக்கமாத்திரையுடன் உட்கார்ந்திருந்தான். அவன் சங்மேன் (CHA TAE HYUN).அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது,காரணம் அவன் ஒரு அனாதை. திட்டவோ, பாராட்டவோ, நம்பிக்கை கொடுக்கவோ அவனுக்கு யாரும் இல்லை.காதலும் அவனுக்கு கைக்கூடவில்லை. இப்படி பல காரணத்தினால் தன் வீட்டு வாடகை பணம் 20000 வான் செலவு செய்து இந்த விடுதியில் தற்கொலை முயற்சிக்கு தயாரானான்.(இந்த படத்திலே அவன் என்ன வேலை செய்யறான்னு தெளிவா சொல்லலே).
அருகில் தண்ணீர் குடுவையை வைத்துக்கொண்டு கையில் இருக்கும் தூக்க மாத்திரையை சிறிது நேரம் வெறித்து பார்த்துவிட்டு ஒரு 20-30 மாத்திரையை ஒவ்வொன்றாய் தன் தனிமையை வருந்தியபடி வாயில்  போட்டுக்கொண்டான்.அந்த நேரம் விடுதி அறையில் தொலைபேசி மணி அடிக்க! எடுக்கலாமா? வேண்டாமா? என்று சற்று யோசித்தவன் வேண்டாமென திரும்பி பார்க்க தண்ணிர் ஜக்கில் தண்ணி இல்லாதை கவனித்து மாத்திரையை துப்பிவிட்டு சென்று எடுத்தான், அந்த பக்கம் விடுதி அறை வாடகை பாக்கியை பற்றி விசாரித்து ஒரு ஆண் குரல் ஒலிக்க , சட்டென்று போனை வைத்தவன் துப்பின மாத்திரையை மீண்டும் வாயிலேயே போட்டுக்கொண்டு குளியலறை குழாய் தண்ணீரை குடித்து மாத்திரையை முழுங்கினான்.நல்லவேலையாக வாடகையை கேட்க வந்தவர் பார்த்துவிட்டு காப்பாற்றுகிறார்.அடுத்த சில நாட்களுக்கு பிறகு ஆற்றில் குதிக்க, காவலர்கள் காப்பாற்றி மருத்துவமனையிலே சேர்த்தனர்..
மருத்துவமனை படுக்கையில் இருந்து கண் விழித்து மயக்கமாய் எழுந்தமர்ந்தான். அவனருகில் கையில் சிகரேட்டுடன் நடுத்தர வயதுடைய ஒரு ஆண் அமர்ந்திருந்தார் (புகை மனிதர்) .பார்த்த சங்மேன், “அஜூஷி, ஆஸ்பட்டில்லே சிகரேட் குடிக்ககூடாதுன்னு தெரியாது”. அங்கு இருந்த மற்றவர்கள் இவனையே வெறித்து பார்க்க, புரியாதவனாய் அந்த அஜூஷியை பார்க்க.ஒரு நர்ஸ் சங்மேன் கையிலிருக்கும் சிகரெட்டை பிடிங்கினார், “உடம்பு சரியில்லை உங்களுக்கு கொஞ்சம் அடங்கி இருங்க”. விழித்தபடியே மீண்டும் அஜூஷியை பார்க்க அவர் கையில் சிகரெட் காணாமல் போயிருந்தது.
சில பரிசோதனையை செய்ய ஸ்டெக்சரில் சங்மேனை அழைத்துச்சென்றனர். அமர்ந்தபடி சென்ற அவன் கம்பௌண்டரிடம், “ஏன் இந்த அஜூஷி என் கூடத்தான் வரனுமா?” பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரை பார்த்தான். கம்பௌண்டர்கள் இருவரும் அவன் பார்த்த காலியான இடத்தை பார்த்துவிட்டு இவனை தள்ளிக்கொண்டு சென்றனர்.
அடுத்து மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு வந்திருந்தான்.
மருத்துவர், “எப்ப இருந்து இந்த தற்கொலை எண்ணம் இருக்கு உங்களுக்கு?”
“கொஞ்ச நாளா தான்.....”
“இந்த முயற்சிக்கு காரணம்?”
“தனிமை டாக்டர்.எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சி!”
“இப்போவும் சாகனும்னு தான் தோணுதா?”
“இன்னொரு முயற்சி செய்யாமே இருப்பேனான்னு தெரியாது டாக்டர்.”
“உண்மை என்னன்னா
மருத்துவர் கவலையடைந்தார்.
“உடம்புலே எந்த பிரச்சனையும்  இல்லை. ஆனா உங்களுக்கு ஃப்ரெண்ட் இருக்கிறதா கேள்விப்பட்டேன்?!!”
சங்மேன், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புகை அஜூஷியை பார்த்து பின் மருத்துவரை பார்த்து அமோத்தித்தவனாய் சிரித்தான். சங்மேனின் நடவடிக்கைகளை கவனித்த மருத்துவர், “நீங்க தற்கொலை முயற்சி செய்ய அவர் தான் காரணமா?” என்று வினவ.
“இல்லை. அவர் என்னொட ஃப்ரெண்டெல்லாம் இல்லை டாக்டர்.அவரை முதல்முதலாய் ஹாஸ்பெட்டில்லே தான் பார்த்தேன்”
“ஓ அப்படியா! இன்னும் யாராவது இருக்காங்களா?” புன்னகைத்தபடியே.
“இல்லைங்களே!” சொன்னவன் காதில் திடீரென்னு அங்கு பெண்ணின் அழுகை குரல் கேட்க அறையை திரும்பி அனைத்து திசையையும் நோட்டமிட்டான், “டாக்டர்! யாரு அழுவுறது?”
“ஆங்க்...! அழற ஒருத்தரும் இருக்காங்க?” கூறிய மருத்துவர் தான் எழுதியிருந்த ‘ஃப்ரெண்ட் = 1’றை ‘ஃப்ரெண்ட் = 2’டாக மாற்றினார்.
பின் ,” எந்த மாதிரியான.....” மருத்துவர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே
சங்மேன் அழுகை கேட்கும் திசையை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தான். டாக்டர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்த கப்போர்டிலிருந்து சத்தம் வந்தது. அதை திறந்தான்.அங்கு நடுத்தர வயது பெண் ஒருத்தி கைக்குட்டையால் வாயைப்பொத்தி அழுதுக்கொண்டிருந்தார்.
“உள்ளே என்ன செய்யறீங்க?” சங்மேன்.
இவனை பார்த்தவுடன் அந்த அழுகைப்பெண், “மன்னிச்சிடுங்க! அழறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” கூறிவிட்டு தன் அழுகையை தொடர்ந்தார்.
மருத்துவரிடம், “ஏன் இவங்க அழறாங்க?”
மருத்துவர் காலி கப்போர்டை பார்த்தவர் விழித்தார்.
கம்பௌண்டர்களை தொடர்புக்கொண்டு சங்மேனை அழைத்துப்போகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
சங்மேன் குரலை உயர்த்தினான், “என்ன டாக்டர் இது? ஒரு பொம்பளை அழுதுட்டு இருக்காங்கன்னு கேட்கிறேன்லே?”
கேட்டவர் தொலைபேசியில், “இங்க அழறவங்களும் ஒருத்தரு இருக்காங்களாம் கூட்டிட்டுப்போங்க!”
சங்மேன் தொடர்ந்தான், “என்ன டாக்டர் இது? உங்களுக்கு இங்க எதுவும் நடக்காத மாதிரி இருக்கீங்க?”
இந்த சமயத்தில் புகை அஜூஷி அருகில் வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுக்க முற்பட்டு ஒரு இன்ச் நகர்த்தினார்.
“பதில் சொல்லுங்க? யார் இவங்க?ஏன் அழறாங்க? நீங்க இவங்களை என்ன செஞ்சிங்க?”

“என்ன?!!!!” திகைத்தார்.
டாக்டர் என்ன செயவதென்று யோசிக்க அதற்குள் கம்பௌண்டர்கள் அவனை பிடித்தனர்.
வாசலில் நின்ற சங்மேன் மருத்துவரிடம், “எதாவது செய்ங்க டாக்டர் பாவம் அவங்க!”
மருத்துவர் அப்படியே பின் சென்று கப்போர்ட்டின் கதவை சார்த்த முற்பட
“யா! எங்க கையை வைக்கப்போறீங்க?!!”
குனிந்தவர் நிமிர்ந்தார்.
“இப்படி வாங்க. அந்த பக்கம் போகாதிங்க!” அதட்டினான்.
அதட்டியபடியே சென்ற அவனுடன் அஜூஷியும் அஜூமாவும் ஸ்டெக்சரில் பின்தொடர்ந்தனர்.
நடுஇரவு..
தூங்கிக்கொண்டிருந்தவனுக்கு அவசர கடமை அழைக்க வெளியே கழிவறைக்கு ஓடினான் சங்மேன்.
மீண்டும் அறைக்கு செல்லும் வழியில் ரிசப்சன் கௌன்டர் மீது ஒரு பெரியவர் அமர்ந்துக்கொண்டு அருகிலிருக்கும் காகிதங்களை ஊதிக்கொண்டிருந்தார். இன்னும் இரண்டடி முன் சென்ற சங்மேன் விழுந்த காகிதங்களை ஒரு செவிலி எடுக்க எடுக்க, அந்த பெரியவர் செவிலியை ரசித்தபடி காகிதங்களை  ஊதினார். இதை பார்த்தவனுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.அவன் அறைக்கு திரும்ப அருகில் அவன் முகத்தருகில் அந்த பெரியவர் நின்றிருந்தார். பயந்தவன் தன் அறைக்கு ஓட.அங்கு மூவரும் பறக்கவிட்ட பலூன் போல் தொங்கிக்கொண்டிருக்க.வெளியே ஓடிவிடலாம் என முற்பட தானாக கதவு சாத்தப்பட்டது.
மெதுவாக திரும்பியவன்
“ஓ..! நீங்க மனிசங்க இல்லை போல?!!!”
தலையசைத்தனர்.
“என்.....என்...என்கிட்ட எதுக்கு வந்தீங்க?” பதர்ட்டமாய்
புகை அஜூஷி, “இன்னிலேயிருந்து உன் உடம்பை நாங்க யூஸ் செஞ்சிக்கப்போறோம்.”
“எ..என்..என்ன? யூஸ்ஸ்ஸ்......”
“ஆமா உடம்பை”
“அப்படினா! நீங்க இல்லை ஒண்ணு, ரெண்டு, மூணு பேரும் என் உ..உடம்பை யூஸ் பன்னப்போறீங்க ?!!!!”
தலையசைத்தனர்.
“ஆங்...திடீர்ன்னு தலை சுத்திறமாறி இருக்கு....” அப்படியே மயங்கி கிழே விழுந்தான்.