சனி, 23 செப்டம்பர், 2017

ஹலோ கோஸ்ட் (கொரிய திரைப்படம்)

                      ஹலோ கோஸ்ட்(HELLO GHOST)
                               பகுதி-1
அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிக்க.அதனருகே ஒரு இளைஞன் கை நிறைய தூக்கமாத்திரையுடன் உட்கார்ந்திருந்தான். அவன் சங்மேன் (CHA TAE HYUN).அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது,காரணம் அவன் ஒரு அனாதை. திட்டவோ, பாராட்டவோ, நம்பிக்கை கொடுக்கவோ அவனுக்கு யாரும் இல்லை.காதலும் அவனுக்கு கைக்கூடவில்லை. இப்படி பல காரணத்தினால் தன் வீட்டு வாடகை பணம் 20000 வான் செலவு செய்து இந்த விடுதியில் தற்கொலை முயற்சிக்கு தயாரானான்.(இந்த படத்திலே அவன் என்ன வேலை செய்யறான்னு தெளிவா சொல்லலே).
அருகில் தண்ணீர் குடுவையை வைத்துக்கொண்டு கையில் இருக்கும் தூக்க மாத்திரையை சிறிது நேரம் வெறித்து பார்த்துவிட்டு ஒரு 20-30 மாத்திரையை ஒவ்வொன்றாய் தன் தனிமையை வருந்தியபடி வாயில்  போட்டுக்கொண்டான்.அந்த நேரம் விடுதி அறையில் தொலைபேசி மணி அடிக்க! எடுக்கலாமா? வேண்டாமா? என்று சற்று யோசித்தவன் வேண்டாமென திரும்பி பார்க்க தண்ணிர் ஜக்கில் தண்ணி இல்லாதை கவனித்து மாத்திரையை துப்பிவிட்டு சென்று எடுத்தான், அந்த பக்கம் விடுதி அறை வாடகை பாக்கியை பற்றி விசாரித்து ஒரு ஆண் குரல் ஒலிக்க , சட்டென்று போனை வைத்தவன் துப்பின மாத்திரையை மீண்டும் வாயிலேயே போட்டுக்கொண்டு குளியலறை குழாய் தண்ணீரை குடித்து மாத்திரையை முழுங்கினான்.நல்லவேலையாக வாடகையை கேட்க வந்தவர் பார்த்துவிட்டு காப்பாற்றுகிறார்.அடுத்த சில நாட்களுக்கு பிறகு ஆற்றில் குதிக்க, காவலர்கள் காப்பாற்றி மருத்துவமனையிலே சேர்த்தனர்..
மருத்துவமனை படுக்கையில் இருந்து கண் விழித்து மயக்கமாய் எழுந்தமர்ந்தான். அவனருகில் கையில் சிகரேட்டுடன் நடுத்தர வயதுடைய ஒரு ஆண் அமர்ந்திருந்தார் (புகை மனிதர்) .பார்த்த சங்மேன், “அஜூஷி, ஆஸ்பட்டில்லே சிகரேட் குடிக்ககூடாதுன்னு தெரியாது”. அங்கு இருந்த மற்றவர்கள் இவனையே வெறித்து பார்க்க, புரியாதவனாய் அந்த அஜூஷியை பார்க்க.ஒரு நர்ஸ் சங்மேன் கையிலிருக்கும் சிகரெட்டை பிடிங்கினார், “உடம்பு சரியில்லை உங்களுக்கு கொஞ்சம் அடங்கி இருங்க”. விழித்தபடியே மீண்டும் அஜூஷியை பார்க்க அவர் கையில் சிகரெட் காணாமல் போயிருந்தது.
சில பரிசோதனையை செய்ய ஸ்டெக்சரில் சங்மேனை அழைத்துச்சென்றனர். அமர்ந்தபடி சென்ற அவன் கம்பௌண்டரிடம், “ஏன் இந்த அஜூஷி என் கூடத்தான் வரனுமா?” பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவரை பார்த்தான். கம்பௌண்டர்கள் இருவரும் அவன் பார்த்த காலியான இடத்தை பார்த்துவிட்டு இவனை தள்ளிக்கொண்டு சென்றனர்.
அடுத்து மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு வந்திருந்தான்.
மருத்துவர், “எப்ப இருந்து இந்த தற்கொலை எண்ணம் இருக்கு உங்களுக்கு?”
“கொஞ்ச நாளா தான்.....”
“இந்த முயற்சிக்கு காரணம்?”
“தனிமை டாக்டர்.எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சி!”
“இப்போவும் சாகனும்னு தான் தோணுதா?”
“இன்னொரு முயற்சி செய்யாமே இருப்பேனான்னு தெரியாது டாக்டர்.”
“உண்மை என்னன்னா
மருத்துவர் கவலையடைந்தார்.
“உடம்புலே எந்த பிரச்சனையும்  இல்லை. ஆனா உங்களுக்கு ஃப்ரெண்ட் இருக்கிறதா கேள்விப்பட்டேன்?!!”
சங்மேன், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புகை அஜூஷியை பார்த்து பின் மருத்துவரை பார்த்து அமோத்தித்தவனாய் சிரித்தான். சங்மேனின் நடவடிக்கைகளை கவனித்த மருத்துவர், “நீங்க தற்கொலை முயற்சி செய்ய அவர் தான் காரணமா?” என்று வினவ.
“இல்லை. அவர் என்னொட ஃப்ரெண்டெல்லாம் இல்லை டாக்டர்.அவரை முதல்முதலாய் ஹாஸ்பெட்டில்லே தான் பார்த்தேன்”
“ஓ அப்படியா! இன்னும் யாராவது இருக்காங்களா?” புன்னகைத்தபடியே.
“இல்லைங்களே!” சொன்னவன் காதில் திடீரென்னு அங்கு பெண்ணின் அழுகை குரல் கேட்க அறையை திரும்பி அனைத்து திசையையும் நோட்டமிட்டான், “டாக்டர்! யாரு அழுவுறது?”
“ஆங்க்...! அழற ஒருத்தரும் இருக்காங்க?” கூறிய மருத்துவர் தான் எழுதியிருந்த ‘ஃப்ரெண்ட் = 1’றை ‘ஃப்ரெண்ட் = 2’டாக மாற்றினார்.
பின் ,” எந்த மாதிரியான.....” மருத்துவர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே
சங்மேன் அழுகை கேட்கும் திசையை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தான். டாக்டர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்த கப்போர்டிலிருந்து சத்தம் வந்தது. அதை திறந்தான்.அங்கு நடுத்தர வயது பெண் ஒருத்தி கைக்குட்டையால் வாயைப்பொத்தி அழுதுக்கொண்டிருந்தார்.
“உள்ளே என்ன செய்யறீங்க?” சங்மேன்.
இவனை பார்த்தவுடன் அந்த அழுகைப்பெண், “மன்னிச்சிடுங்க! அழறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” கூறிவிட்டு தன் அழுகையை தொடர்ந்தார்.
மருத்துவரிடம், “ஏன் இவங்க அழறாங்க?”
மருத்துவர் காலி கப்போர்டை பார்த்தவர் விழித்தார்.
கம்பௌண்டர்களை தொடர்புக்கொண்டு சங்மேனை அழைத்துப்போகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
சங்மேன் குரலை உயர்த்தினான், “என்ன டாக்டர் இது? ஒரு பொம்பளை அழுதுட்டு இருக்காங்கன்னு கேட்கிறேன்லே?”
கேட்டவர் தொலைபேசியில், “இங்க அழறவங்களும் ஒருத்தரு இருக்காங்களாம் கூட்டிட்டுப்போங்க!”
சங்மேன் தொடர்ந்தான், “என்ன டாக்டர் இது? உங்களுக்கு இங்க எதுவும் நடக்காத மாதிரி இருக்கீங்க?”
இந்த சமயத்தில் புகை அஜூஷி அருகில் வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுக்க முற்பட்டு ஒரு இன்ச் நகர்த்தினார்.
“பதில் சொல்லுங்க? யார் இவங்க?ஏன் அழறாங்க? நீங்க இவங்களை என்ன செஞ்சிங்க?”

“என்ன?!!!!” திகைத்தார்.
டாக்டர் என்ன செயவதென்று யோசிக்க அதற்குள் கம்பௌண்டர்கள் அவனை பிடித்தனர்.
வாசலில் நின்ற சங்மேன் மருத்துவரிடம், “எதாவது செய்ங்க டாக்டர் பாவம் அவங்க!”
மருத்துவர் அப்படியே பின் சென்று கப்போர்ட்டின் கதவை சார்த்த முற்பட
“யா! எங்க கையை வைக்கப்போறீங்க?!!”
குனிந்தவர் நிமிர்ந்தார்.
“இப்படி வாங்க. அந்த பக்கம் போகாதிங்க!” அதட்டினான்.
அதட்டியபடியே சென்ற அவனுடன் அஜூஷியும் அஜூமாவும் ஸ்டெக்சரில் பின்தொடர்ந்தனர்.
நடுஇரவு..
தூங்கிக்கொண்டிருந்தவனுக்கு அவசர கடமை அழைக்க வெளியே கழிவறைக்கு ஓடினான் சங்மேன்.
மீண்டும் அறைக்கு செல்லும் வழியில் ரிசப்சன் கௌன்டர் மீது ஒரு பெரியவர் அமர்ந்துக்கொண்டு அருகிலிருக்கும் காகிதங்களை ஊதிக்கொண்டிருந்தார். இன்னும் இரண்டடி முன் சென்ற சங்மேன் விழுந்த காகிதங்களை ஒரு செவிலி எடுக்க எடுக்க, அந்த பெரியவர் செவிலியை ரசித்தபடி காகிதங்களை  ஊதினார். இதை பார்த்தவனுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.அவன் அறைக்கு திரும்ப அருகில் அவன் முகத்தருகில் அந்த பெரியவர் நின்றிருந்தார். பயந்தவன் தன் அறைக்கு ஓட.அங்கு மூவரும் பறக்கவிட்ட பலூன் போல் தொங்கிக்கொண்டிருக்க.வெளியே ஓடிவிடலாம் என முற்பட தானாக கதவு சாத்தப்பட்டது.
மெதுவாக திரும்பியவன்
“ஓ..! நீங்க மனிசங்க இல்லை போல?!!!”
தலையசைத்தனர்.
“என்.....என்...என்கிட்ட எதுக்கு வந்தீங்க?” பதர்ட்டமாய்
புகை அஜூஷி, “இன்னிலேயிருந்து உன் உடம்பை நாங்க யூஸ் செஞ்சிக்கப்போறோம்.”
“எ..என்..என்ன? யூஸ்ஸ்ஸ்......”
“ஆமா உடம்பை”
“அப்படினா! நீங்க இல்லை ஒண்ணு, ரெண்டு, மூணு பேரும் என் உ..உடம்பை யூஸ் பன்னப்போறீங்க ?!!!!”
தலையசைத்தனர்.
“ஆங்...திடீர்ன்னு தலை சுத்திறமாறி இருக்கு....” அப்படியே மயங்கி கிழே விழுந்தான்.
                          
                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக